P.J.
0
ராகு தோஷம் நீக்கும் செங்காணி
ராகு தோஷம் நீக்கும் செங்காணி
செங்காணியில் அருளும் ஈசனின் திருநாமம் கோதபரமேஸ்வரர். இறைவி- ஸ்ரீசிவகாமி அம்பாள். இப்பகுதி செம்மண் நிறைந்த பகுதி என்பதால், இந்த ஊருக்குச் செங்காணி என்ற பெயர் வந்ததாம். 12-ஆம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாவும் இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங் களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர். அவர்களின் விக்கிரகத் திருமேனி யில் உள்ள ராகுவே அதற்கு சாட்சி.
'ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் கல்யாணம் தடைபடும். திருமணம் ஆனவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். இப்படி, ராகு தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிப்படுவோர் இங்கு வந்து ஸ்ரீகோதபரமேஸ்வரரை வழிபடுவது நல்லது. இந்தச் சிவனுடைய அம்சத்தில் ராகு இருக்கிறார். தவிர, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர்,ஸ்ரீஆறுமுகநயினார், ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீநந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனி யிலும் ராகு இருப்பதைக் காண முடியும்...' என்று கூறிய கோயில் அர்ச்சகர் ஆர்.ராஜூ, ராகு தோஷ பரிகாரம் செய்வது எப்படி என்பதையும் விளக்கினார்.
'ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளியால் ஆன சர்ப்பத்தை வாங்கி வந்து தந்தால், சங்கல்பம் பெற்று அதை ஸ்வாமி முன்பு வைப்போம். பிறகு, மூலவருக்கும் பக்தர் தந்த வெள்ளி சர்ப்பத்துக்கும் 18 வகையான அபிஷேகங்கள் செய்வோம். இந்தப் பரிகாரம், ராகு தோஷத்தை உடனடியாக நீக்கும்.
இதேபோல், தொடர்ந்து 11 பிரதோஷ நாட்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், நினைத்த நற்காரியங்கள் சட்டென்று நிறைவேறும். பிரதோஷம் அன்று ஸ்வாமிக்கும் நந்திக்கும் ஒரே நேரத்தில் 38 வகையான அபிஷேகங்கள் நிகழும்!
இங்குள்ள ஸ்ரீபைரவரும் விசேஷமானவர். தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 5 முதல் 6 மணி வரையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது இவரைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், பில்லி- சூனியம் முதலான பிரச்னைகள், சனி தோஷம் ஆகியன நீங்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் இவரை வழிபட்டால், தொழிலில் முன்னேற்றம் காணலாம்' என்றார்.
இந்தக் கோயிலின் அம்பாளான ஸ்ரீசிவகாமி அம்மன் தெற்குப் பார்த்த திருக்கோலத்தில் அருள்கிறார். இவரது திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும் என்கிறார்கள்!
???? ????? ???????? ????????!

விவேகப்ரியன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
???? ????? ???????? ????????!