மோர் மிளகாய்..!

Status
Not open for further replies.
Vikatan EMagazine

11182190_1090665410949869_2181326035224371014_n.jpg




தேவையானவை:

பச்சை மிளகாய் - 100 கிராம்,
கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு
உப்பு - 2 டீஸ்பூன்.


செய்முறை:

பச்சை மிளகாயைக் கழுவி, துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும்.

காம்பு மிகப் பெரிதாக இருந்தால், சிறிய அளவு மட்டும் விட்டு விட்டு, மீதியை நீக்கிவிடவும்.

பெரிய கண்ணாடி பாத்திரம் / ஜாடியில் மிளகாயை சேர்க்கவும். தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி வைக்கவும்.


3 நாட்கள் ஊறிய பிறகு, தயிரிலிருந்து மிளகாயை சற்றே பிழிந்தாற்போல் எடுத்து, ட்ரே (அ) தட்டு (அ) பெரிய பாலித்தீன் கவரில் பரப்பி, நல்ல வெயிலில் காய வைக்கவும்.

தயிர் கலவையும் வெயிலேயே வைக்கலாம்.

மாலை ஆனவுடன் மிளகாயை திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும்.





ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படி காய வைக்கவும்.

வெயிலில் வைக்க வைக்க... மிளகாயும், தயிரும் காய்ந்துவிடும்.

பிறகு, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தவும் (எண்ணெயில் நன்றாக வறுக்க வேண்டும்).

இது மோர் சாதத்துக்கு சரியான ஜோடி. மோர்க்களி செய்யும்போதும் பயன்படுத்தலாம்.






 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top