P.J.
0
மேகி நுாடுல்ஸ்' பிரச்னை குறித்து, ஊட்டச்ச
மேகி நுாடுல்ஸ்' பிரச்னை குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்
மேகி நுாடுல்ஸ்' பிரச்னை குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ், குழந்தைகள் நிபுணர் ரவி ஆகியோர் கூறியதாவது:
* உணவின் தரத்தை கூட்டவும், வாசனைக்காகவும், 'மோனோ சோடியம் குளூட்டாமேட்' என்ற சைனீஸ் சால்ட் சேர்க்கப்படுகிறது; சரியாக சமைக்காத உணவில் இதை சேர்த்தால், 'டேஸ்ட்' கூடி விடும்.
* சாப்பிட நன்றாக இருக்கும்; ஆனால், சாப்பிட்ட திருப்தி வராது; இன்னும் சாப்பிடத் தோன்றும்; உடல் பருமன் அதிகரிக்கும்; உடல் பருமன் சார்ந்த அனைத்து நோய்களும் தானாக வரும்.
* ஒவ்வாமையால் கழுத்துப்பட்டை, பின் முதுகு பகுதிகளில் எரிச்சல் ஏற்படும்; மார்பக பகுதி இழுத்து பிடித்த மாதிரி இருக்கும்; வயிறு மந்தமாதல், வயிற்று வலி ஏற்படும்; தலைவலியோடு, வியர்வை சுரப்பு அதிகமாகும்; உணவுக் குழாயை பாதிக்கும்; உடல் தளர்ச்சி ஏற்படும்.
* மலட்டுத்தன்மைக்கும், புற்றுநோய் பாதிக்கவும் வாய்ப்புள்ளது; இதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன.
*பொதுவாக, 70 கிலோ எடையுள்ள ஒருவர், ஏழு கிராம் அளவில், சைனீஸ் உப்பை பயன்படுத்தலாம். நோய் பாதிப்புள்ளோர் இந்த உப்பை பயன்படுத்தும்போது,
உணவில் சேர்க்கும் சாதாரண உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
*கர்ப்பிணி பெண்கள், ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளும், இந்த உப்பை பயன்படுத்தக் கூடாது.
*இதைவிட, காரீயம் (LEAD) ஆபத்தானது; இது, 'மேகி நுாடுல்ஸ்'சில் உள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. ஒரு கிலோ உணவில், 2.25 மி.கி., வரை இருக்கலாம்; அதற்கு மேல் அதிகரித்தால், ஆபத்து. பெரியவர்களுக்கு, மலச்சிக்கல் ஏற்படும்; சிந்தனைத்திறன் குறையும்; நாளடைவில், நரம்புகளை பாதிக்கும்; கை, கால்கள் நினைத்தபடி செயல்படாது; ரத்த அழுத்தம் கூடுவதோடு, கேட்கும் திறன், பார்வைத்திறன் குறையும்.
* குழந்தைகளிடையே, மூளை, நரம்பு பாதிப்பு, ரத்த சோகை வரும்; கல்லீரல், நுரையீரல், சிறுநீரகத்தையும் பாதிக்கும்; கேட்கும் திறன் குறையும்; வளர்ச்சியும் தடைபடும்; உயிரிழப்பும் ஏற்படலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எம்.எஸ்.ஜி., என்றால் என்ன?
எம்.எஸ்.ஜி., என அழைக்கப்படும், 'மோனா சோடியம் குளூட்டாமேட்' என்பது, குளுடாமிக் அமினோ அமிலத்தின் சோடியம் உப்பாகும்; இது தக்காளி, உருளைக்கிழங்கு, காளான், பாலாடைக்கட்டி போன்றவற்றில் இயற்கையாகவே காணப்படுகிறது.
வணிக ரீதியாக, ஸ்டார்ச், கரும்பு போன்றவற்றை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது; இது, உணவுப்பொருளில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இதை, ஜப்பானின் அஜினமோட்டா என்ற நிறுவனம் தயாரித்து, அதிகளவில் விற்பனை செய்கிறது. தயாரிப்பின் போது, பன்றி இறைச்சி பயன்படுத்தப்படுவதாக எழுந்த சர்ச்சையால், 2001ல் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது.
பால் பவுடரிலும் பிரச்னை?
'பிரபல நிறுவனங்களின், பால் பவுடர் தரமானதாக இல்லை' என, தனிநபர் ஒருவர் உணவு பாதுகாப்புத் துறையில், புகார் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்ட பரிசோதனைக் கூடத்தில் நடந்த ஆய்வில், பால் பவுடர் தரமற்றது என்பது தெரியவந்தது. ஆனால், இந்த சோதனை காலதாமதமாக நடத்தப்பட்டதால், நடவடிக்கை எடுக்க முடியவில்லை.அதிகாரிகளே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பால் பவுடர் மாதிரிகளை சேகரித்து, மீண்டும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்; ஆய்வு முடிவுகளும், ஓரிருநாளில் கிடைக்கும். அவற்றை பார்த்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
"
இந்த விளம்பரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடித்தேன். இப்போது, அந்த நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பேன்
அமிதாப் பச்சன்,
பாலிவுட் நடிகர்
12 ஆண்டுகளுக்கு முன், இந்த விளம்பரத்தில் நடித்தேன். இப்போது, இது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் என் பெயரையும் இழுக்கின்றனர்; இதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?
ப்ரீத்தி ஜிந்தா,
பாலிவுட் நடிகை
சட்டத்துக்கு உட்பட்டு, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மும்பை போன்ற நகரங்களில், 25 சதவீத மக்கள், வீடுகளில் சாப்பிடாமல், 'பாஸ்ட் புட்' கடைகளில் தான் சாப்பிடுகின்றனர்; இதுதான் பல பிரச்னைகளுக்கு காரணம்
ராம்விலாஸ் பஸ்வான்,
மத்திய உணவு அமைச்சர்
- நமது நிருபர் குழு -
?????????? - ????? ??????????????