முருகனும் பரிகார ஸ்தலங்களும்

Status
Not open for further replies.
முருகனும் பரிகார ஸ்தலங்களும்

முருகனும் பரிகார ஸ்தலங்களும்


தீமைகள் அழிந்து நன்மைகள் பெருக முருகனை வேண்டி கந்த சஷ்டி விரதம் இருப்பது வழக்கம். சென்னையை சுற்றியுள்ள பிரச்சனைகளை தீர்க்கும் முருகப் பெருமான் ஸ்தலங்களில் சில ;


சிங்காரவேலர் சந்நிதி, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் ப்ராகாரத்தில் உள்ளது.
ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார். இருபுறமும் ஸ்ரீவள்ளி-தெய்வானை தேவியர் உள்ளனர்.




செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும் மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.


brahmasasta_siddhandi_200.jpg

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது. இங்கே காலையில்-பாலனாக, நண்பகலில்-வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார். முருகன். `பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார். எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்'. இத்தலத்திற்க்கு வந்து முருகனை வழிபட்டால் வேளை வாய்ப்புகள், உயர் பதவிகள் வந்துசேறும்.

kandaswamy-temple-thiruporur-limage4.jpg


ஒருசமயம் " போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது ? " என்ற கேள்வி
அகத்திய மாமுனிவருக்கு வரவே உமயவள் மைந்தன் கந்த பெருமானே " அனைத்துப் பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் மிக உகந்தது யுத்தபுரி" என கூறியுள்ளார். யுத்தபுரி தான் இன்று திருப்போரூர் என பெயர் மாற்றம் பெற்றது.
திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

siruvapuri%20murugan.jpg

வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி. சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக இத்தலம் அமைந்திருக்கிறது. கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருளபாலித்த தலம் என்ற சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு. முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசித்து வழிபட வீடு-மனை யோகம் அமையும் என்பது ஐதீகம்.


முருகப்பெருமானின் வாகனமாகும் பேறுபெற்ற சூரன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம். திண்டிவனம் அருகேயுள்ள இந்த தலத்தில் கடும் தவமிருந்து முருகனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் சங்குகண்ணன் என்ற சித்தர். இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள். மயிலம் முருகனை வழிபட அல்லல்கள் நீங்கும்; ஆனந்தம் பெருகும்.


இப்படி பல பிரச்சனைகளைத் தீர்த்து நிம்மதி அழிக்கும் ஸ்தலங்களுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கி சகல நன்மைகளயும் பெறுவோம்.

ஓம் சரவண பவ !
????????? ?????? ???????????
 
Status
Not open for further replies.
Back
Top