முக்கியத்துவம்வாய்ந்த பைரவரின் ஜென்ம அ&#

முக்கியத்துவம்வாய்ந்த பைரவரின் ஜென்ம அ&#

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை (30-ந்தேதி) பைரவ ஜென்ம அஷ்டமி தினமாகும். இந்த தினத்தில் பைரவரை மனம் உருகி வழிபட்டால் நீங்கள் கேட்டதையெல்லாம் தருவார்.


இவருக்கு காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்த சாமபூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.


மனதில் ஏற்படும் பயத்தை நீக்குபவரான பைரவரை வழிபட்டால் தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, துர்மர்ணம் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவரே.


பைரவரை வழிபடுவதற்கு ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி திதி மிகவும் சிறந்த நாளாகும். இந்த நாளில் தான் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
 
ஒவ்வொரு மாதமும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் வ்ழிபட வேண்டும்.
 
Back
Top