V
V.Balasubramani
Guest
மீண்டும் ரயில்வே பணியில் 'மெட்ரோ ரயில்' ஸ&
மீண்டும் ரயில்வே பணியில் 'மெட்ரோ ரயில்' ஸ்ரீதரன்
புதுடில்லி: 'மெட்ரோ மேன்' என, பலராலும் அழைக்கப்படும் ஸ்ரீதரன், 82, மீண்டும் இந்தியன் ரயில்வேக்கு திரும்புகிறார். அவரை ஒரு நபர் கமிட்டி ஒன்றின் தலைவராக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நியமித்துள்ளார்.
டில்லியில், மெட்ரோ ரயில் பாதை அமைத்து, அங்கு அந்த ரயில் போக்குவரத்து திறம்பட செயல்பட காரணமாக இருந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு, 2001ம் ஆண்டில், பத்மஸ்ரீ விருதும், 2008ல், பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்தியன் ரயில்வேயில், 2012ல், அனில் காகோத்கர் தலைமையில், உயர்மட்ட பாதுகாப்பு குழு ஒன்று செயல்பட்ட போது, அதன் உறுப்பினராக, ஸ்ரீதரன் இருந்தார். இது தான், ரயில்வேயில் அவர் ஆற்றிய கடைசி பணி. அதற்கு முன், இந்தியன் ரயில்வேயில் பல பதவிகளை வகித்துள்ளார். பணி ஓய்வுக்குப் பின், 1997ல், டில்லி மெட்ரோ ரயில் திட்ட, பொதுமேலாளராக நியமிக்கப்பட்ட அவர், அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்து, பெயர் பெற்றார்.
இந்நிலையில், ஸ்ரீதரன் மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்புகிறார். ரயில்வே துறை முறையாகவும், பொறுப்புடனும், ஒளிவுமறைவு இன்றியும் செயல்படுவதற்கான, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்குவதற்காக, ஒரு நபர் கமிட்டி ஒன்றை அமைக்க, புதிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டமிட்டுள்ளார். அந்த ஒரு நபர் கமிட்டியின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை, கடந்த, வியாழக்கிழமை, ரயில் பவன் பிறப்பித்துள்ளது. டெண்டர்கள் உட்பட, ரயில்வேயில் வர்த்தக ரீதியான அனைத்து முடிவுகளையும், பொது மேலாளர்களோ அல்லது இதர அதிகாரிகளோ எடுப்பதற்கான வழிமுறைகளை இவர் உருவாக்குவார். மேலும், ஸ்ரீதரன் தன் பணிதொடர்பான இடைக்கால அறிக்கையை, இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இறுதி அறிக்கையை, மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source: ???????? ??????? ??????? '?????? ?????' ???????? | 'Metro Man' Sreedharan coming - Dinamalar

Last edited by a moderator: