மின் கம்பி அறுந்து விழுந்தால் மின்சார சப

Status
Not open for further replies.
மின் கம்பி அறுந்து விழுந்தால் மின்சார சப

மின் கம்பி அறுந்து விழுந்தால் மின்சார சப்ளையை நிறுத்த புதிய கண்டுபிடிப்பு!

(19/09/2015)


udaykumar%20new.jpg




மின்கம்பி அறுந்து விழுந்ததும், மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும் வகையிலான புதிய கண்டுபிடிப்பை திண்டிவனம் அடுத்த மைலம் பொறியியல் கல்லூரி மாணவர் உதயபிரகாஷ் கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் பேசினோம்...

"மழைக்காலத்தில் செய்தித்தாள்களில் மின்கம்பி விழுந்ததால் இறப்பவர்கள் குறித்த செய்திகள் படிக்கும் போது மனசு கனத்துப் போகும். இதற்கு என்னதான் தீர்வு என்று யோசித்த போது, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததும் மின் சப்ளையை துண்டிக்க வழிசெய்யும் வகையில் கண்டுபிடிப்பு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.


வழக்கமாக மின்சாரம் பகிர்வு செய்யும் லைன்ல மின் பகிர்வு தொடர்ந்து நடக்கும். கன மழைக்கும், அப்போது அடிக்கும் வலுவான காற்றுக்கும் தாக்குப் பிடிக்காத நிலையில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்துவிடும். அந்த நிலையிலும் மின்பகிர்வு அந்தக் கம்பிகளில் இருக்கும். இதைத் தடுக்க மின்மாற்றிகளின் பக்கத்தில், பாதுகாப்பு கருவியாக மின்னோட்டத்தை உணரும் கருவி ஒன்று பொருத்த வேண்டும்.

மின்னோட்டமானது ஓர் வட்டபாதையில் இயங்குவதுபோல் நான் உருவாக்கி உள்ளேன். மின்கம்பி அறுந்தால் வட்ட பாதையில் மின்னோட்டம் துண்டிக்கப்படும். எனவே தொடர் மின்னோட்டம் இருக்காது. இந்த கருவி, மின்கம்பி அறுந்து விழுந்ததை கண்டறிந்து கரண்ட் பாஸ் ஆவதை நிறுத்திவிடும்.

இந்தக் கண்டுபிடிப்பால் உயிர்பலி நிகழாது. ஏன் எனில் பவர் கட் ஆனதும் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் உடனடியாக சென்றுவிடும். விபத்துக்கள் தவிர்க்கப்படும்" என்கிறார் உதயபிரகாஷ் .


http://www.vikatan.com/news/article.php?aid=52619
 
Useful invention which can save many lives in waterlogged areas! Mr. Udaya Prakash deserves appreciation and incentives for working on similar useful projects.
 
Status
Not open for further replies.
Back
Top