P.J.
0
மானிய சிலிண்டர்களை எந்த நேரத்திலும் வாங&
மானிய சிலிண்டர்களை எந்த நேரத்திலும் வாங்கலாம்: கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!
புதுடெல்லி: ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் அரசு, ஆண்டுக்கு மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்கள் ஒன்பதுதான் வழங்கப்படும் என்று அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது. அதே சமயத்தில், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்தது. இந்த கட்டுப்பாட்டால், சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இனிமேல், ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஆண்டுக்கு 9 சிலிண்டர்களாக இருந்ததை முந்தைய அரசு 12 சிலிண்டர்களாக உயர்த்தியது. இருப்பினும், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே பெற முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
ஒரு சில மாதங்களில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டர் கூட தேவைப்படாது. ஆனால், பண்டிகை காலங்களில் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்கள் தேவைப்படும். ஆனால், அவர்களால் அதை பெற முடியாத நிலை இருந்தது. மேலும், ஒரு குறிப்பிட்ட மாதத்துக்குரிய சிலிண்டரை பெற தவறியவர்கள், அடுத்து வரும் மாதங்களில் அந்த சிலிண்டரை பெற முடியாத நிலை இருந்தது.
எனவே, வாடிக்கையாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாட்டை நீக்குவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இனிமேல், அவர்கள் ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை தங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள், வழக்கம் போல, அதை சந்தை விலைக்கு வாங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
????? ???????????? ???? ??????????? ?????????: ????????????? ????????? ?????? ????!