மனிதக் கழிவை அகற்ற நவீனக் கருவி:

Status
Not open for further replies.
மனிதக் கழிவை அகற்ற நவீனக் கருவி:

மனிதக் கழிவை அகற்ற நவீனக் கருவி:

(15/06/2015)

ல்விப் படிப்பு என்பது வெறும் படிப்பதற்கும், வேலை தேடுவதற்கும் மட்டுமல்ல. அது சமுதாய மாற்றத் திற்கான ஒன்று என்று நிரூபித்துள்ளனர் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர்கள். விவசாயத்திற்கு உரம் தெளிக்க, பொதுக் கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் சுத்தப்படுத்த, மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் பயணிக்க... என நீள்கிறது இவர்களது சமூக பங்களிப்புகளின் பட்டியல்.

அருணை பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் பயிலும் வினோத் மற்றும் குழுவினர், ஜெயபிரபாகரன் மற்றும் குழுவினர், ஜெயபிரகாஷ் மற்றும் கணேஷ் ஆகியோர்தான் இவைகளை உருவாக்கியவர்கள்.

தானியங்கி பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தெளிப்பான்

வினோத், தட்சிணாமூர்த்தி, சுதீஷ், முருகன் ஆகியோர் விவசாயத்திற்கான தானியங்கி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பான் கண்டுபிடித்துள்ளனர். இதை இயக்குவதற்கு மோட்டார் எரிபொருள் தேவையில்லை என்பது இவர்களது கண்டுபிடிப்பின் சிறப்பு. மனித ஆற்றல் மூலம் கொடுக்கப்படும் விசை மற்றும் அழுத்தம் காரணமாக இயங்குவதால் இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் இவர்கள்.


arunai%20sprayer%20550%201.jpg
விவசாயிகள் சுலபமாக பயன்படுத்தும் முறையில் இருப்பது மட்டுமில்லாமல், இதற்கான செலவும் 3000 ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது.

கழிவுகளை சுத்திகரிக்கும் ஆகர் பம்ப்

ஜெயபிரகாஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் கண்டுபிடித்துள்ள 'கழிவு வெளியேற்றும் கருவி' இன்றைய சூழலில் நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றே கூறலாம். சாலைகளில், பொது இடங்களில் என எங்கும் பரவிக் கிடக்கும் வீட்டுக் கழிவுகள் மற்றும் பாதாள சாக்கடைகள் என அனைத்தையும் சுத்தம் செய்ய இன்றுவரையில் பெரும்பாலான இடங்களில் மனிதன் உள்ளிறங்கியே சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.


arunai%20trinage%20550%201.jpg


இதற்கு தீர்வாக ’கைமுறை ஆகர் பம்ப்’பை கண்டுபிடித்துள்ளனர் இந்த மாணவர்கள். இதனை பாதாள சாக்கடை, செப்டிக் டேங்க் போன்றவற்றில் செலுத்தி மேலிருந்து கையால் சைக்கிள் பெடல் போல் இயக்கினால் உள்ளிருக்கும் திண்ம, திரவ பொருட்களை சுலபமாக வெளியேற்றிவிடலாம். இதற்கு எரிபொருள், மின்சாரம் போன்ற எதுவும் தேவையில்லை வெறும் மனித ஆற்றல் மூலம் இயங்குவதால் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இதற்கான செலவும் மிகக் குறைவு என்பதால் நிச்சயம் இது ஒரு மாற்றாக அமையும் என்கின்றனர் ஜெயபிரகாஷ் மற்றும் கணேஷ்.

படிப்பை வெறும் பட்டம் பெறும் இயந்திரமாக கருதாமல், தங்கள் திறமைக்கான உரைகல்லாக நினைத்தால் அது சமூக மாற்றத்திற்கான படிக்கட்டாக மாறும்.


மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறி இறங்க வசதியான இயந்திர அமைப்பு:

ஊனமுற்றோர் பேருந்துகளில் ஏறி இறங்க வசதியாக பேருந்தோடு இணைக்கக்கூடிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் ஜெய பிரபாகரன், கார்த்திக், வசந்த், மதன்ராஜ் ஆகிய மாணவர்கள். சென்னை போன்ற நகரங்களில் இதுபோன்ற கருவிகள் ஒன்றிரண்டு செயல்பாடுகளில் இருந்தாலும், நிறுத்தங்களில் ஊனமுற்றோரை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் குறைந்தது 10 நிமிடங்கள் ஆகிறது. அதனால் நேரத்தை குறைக்கும் வகையில் மேலும் சிறந்த முறையில் இயங்கும் விதத்தில் இதனை வடிவமைத்துள்ளனர் இந்த மாணவர்கள்.


bus_0615.jpg
”ஊனமுற்றோரை யாரும் பாரமாக நினைக்கக் கூடாது. சமமாக கருத வேண்டும் என்பதும், அவர்களுக்கும் சமூகத்தில் தாங்களும் மற்றவர்களுக்கு சமமமானவர்கள் என்ற தன்னம்பிக்கையும் ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் அதற்கான சிறுதொடக்கமே இது” என்றார்கள் இந்த மாணவர்கள் நிஜமான அக்கறையோடு.


மாணவர்களுக்கு பாராட்டுக்கள்!
- ரா.கீர்த்திகா (மாணவர் பத்திரிகையாளர்)


http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

 
Status
Not open for further replies.
Back
Top