மனதை தொட்ட. பதிவு

  • Thread starter Thread starter Falcon
  • Start date Start date
Status
Not open for further replies.
F

Falcon

Guest
மனதை தொட்ட. பதிவு




மனதை தொட்ட. பதிவு
***********

கீதாசார்யன் பத்திரிக்கையில் சாண்டில்யன் எழுதிய ’அவன் உகக்கும் ரஸம்’ என்ற சின்ன கதை:--

அவன் உகக்கும் ரஸம்

ரங்கநாதன் சந்நிதிக்குச் செல்லும் படிகளொன்றில் உட்கார்ந்த வண்ணம் வயதான அரையர் ஒருவர் திருவாய் மொழிப் பாசுரங்களை மெல்லிய குரலில் இசைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிரண்டும் பார்வை இழந்து இடந்தன. எத்தனையோ நல்லவர் இருப்பினும் சதா வெற்றிலை போடும் ஒரு பழக்கம் மட்டும் அவருக்கு இருந்ததால் மடியில் ஒரு வெற்றிலைச் செல்லமும் கிடந்தது.

அந்த வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலைப் பாக்குடன் ஒரு ஸாளக்கிராமத்தையும் வைத்திருந்தார் அரையர்,

பாக்கைத் தேடி பெட்டியைத் தடவினார் ஒருமுறை. ஸாளக்கிராமம் கிடைத்தது. அதைப் பாக்கென்று நினைத்து வாயில் போட்டுக் கடித்துப் பார்த்தார். ஸாளக்கிராமம் என்று தெரிந்ததும் அதை வாயிலிருந்து எடுத்து மேல் வேஷ்டியில் துடைத்து மீண்டும் பெட்டியில் போட்டுவிட்டார்.

பிறகு பாக்கொன்றை எடுத்து வாயில் போட்டு வெற்றிலையையும் சுண்ணம் தடவி கிழித்து மென்று சுவைக்கலானார்.

இது நடப்பது முதல் தடவையல்ல. தினமும் பலமுறை நடந்த விபரீதந்தான். இதை ஒரு மிக வைதீக வைஷ்ணவர் நீண்ட நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார், அரையர் ஸாலக்கிராமத்துக்கு இழைக்கும் அநாசாரத்தையும் அபசாரத்தையும் அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆகவே ஒரு நாள் ஸ்வாமி தினம் பெருமாளை வாயில் போட்டு எச்சில் பண்ணுகிறீரே. இது நியாயமா?" என்று கேட்டார்.

”கண் தெரியவில்லை” என்றார் அரையர்,

அப்படியாயானால் பெருமாளே என்னிடம் கொடுமே. நான் ஆசாரமாக வைத்து ஆராதனம் செய்கிறேன்" என்றார்.

"தாராளமாக எடுத்துப் போம்" என்று ஸாளக்கிராமத்தை எடுத்து அந்த வைதிகரிடம் கொடுத்து விட்டார் அரையர்,

அன்று அந்த வைஷ்ணவப் பிராம்மணர் வீட்டில் ஒரே தடபுடல் சாளக்கிராமத்தை அவர் தனது கோவிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணினார். திருமஞ்சனம் கண்டருளப் பண்ணி, புளியோதரை, தத்தியோதனம் முதலிய பிரசாதங்களேயெல்லாம் அமுது செய்வித்தார். சேவை, சாற்று முறைக்கு வேறு இரண்டு மூன்று ஸ்வாமிகளையும் எழுந்தருளப் பண்ணி அதையும் விமர்சையாகச் செய்து முடித்தார்.

அன்று நிம்மதியாகப் படுத்தார் அந்த வைதிகர்.

அவர் நல்ல துயில் கொண்டதும் பெருமாள் அவர் சொப்பனத்தில் வந்து 'நீ எதற்காக என்னை அரையர் வெற்றிலப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தாய்' என்று கேட்டார் கோபத்துடன்

'ஸ்வாமி அங்கு உமக்கு அபசாரம் நடக்கிறது. அதனால் எடுத்து வந்தேன்' என்றார் அந்த ஸ்வாமி,

"என்ன அபசாரம்?' என்று பெருமாள் கறுவினர்.

"தேவரீரை தினம் பத்து தடவையாவது எச்சில் செய்கிறார் அரையர்' என்று சொன்னார் அந்த ஸ்வாமி.

”அட பைத்தியக்காரா அது திருவாய்மொழி சொல்லும் வாயடா. தினம் அந்த ரஸத்தை சிறிது நேரமாவது நான் அனுபவிக்கிறேன். அதிலிருந்து என்னை பிரிந்து இந்த மரப் பெட்டியில் ஏன் அடைத்து வைத்திருக்கிறாய்? உடனே கொண்டுபோய் அரையர் பெட்டியில் என்னை சேர்த்து விடு" என்றார் பெருமாள்.

சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்து உட்கார்ந்தார் வைதிகர். பகவான் திருவுள்ளத்தை நினைத்து நினைத்து உருகினார். ”திருவாய்மொழி அனுசந்திக்கும் நாவே நாவு, அதில் ஊறும் நீரே அமுதம் அதுவே அவன் உகக்கும் ரஸம்" என்று சொல்லிக் கொண்டார்.

மறுநாளே பெருமாள் பழையபடி வெற்றிப்பெட்டிக்குள் பாக்குடன் கலந்து கிடந்தார். அரையர் கையும் ஒருமுறை பாக்கைத் தேடி பாக்குக்குப் பதில் ஸாளக்கிராமத்தை வாயில் போட்டு மீண்டும் எடுத்து துணியில் துடைத்து பெட்டியில் சேர்த்தது. வாய் திருவாய்மொழியை மெல்ல இசைத்தது.

சாண்டில்யன், கீதாச்சாரியன், நவம்பர் – 1978

Source: WhatsApp…
 
Status
Not open for further replies.
Back
Top