• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மனதைத் தொட்ட வரிகள் Lines that touched our heart

Status
Not open for further replies.
மனதைத் தொட்ட வரிகள் Lines that touched our heart

1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்றுஉறுதியாகச் சொல்ல முடியாது.!
2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!
3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!
4.அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.
5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!
6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!
7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!
8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !
9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !
10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.
11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்
13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!

14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !
15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !
16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால் செலவு செய்யுங்க. உங்களின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால் கடன் கேளுங்க!
17. ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம் தான்: ரியல் எஸ்டேட்காரனுக்கு தூரம் கூட பக்கம் தான்.

KP Prakash
 
Status
Not open for further replies.
Back
Top