• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மந்திரங்களுக்கு சக்தி உண்டு

Status
Not open for further replies.
மந்திரங்களுக்கு சக்தி உண்டு

மந்திரங்களுக்கு சக்தி உண்டு. நிறைய எழுதலாம்.பெரிய கட்டுரை ஆகி விடும் ஆகவே.மிகவும் சுருக்கமாக:

1. பிரிட்டனில் நெய்பர்ஸ் NEIGHBOURS என்ற சீரியல் பல ஆண்டுகளாக டெலிவிஷனில் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வீட்டீலேயே முடங்கிகிடப்பதால் இதை தினமும் பார்த்துவந்தனர். அவர்கள் வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கு கருவிலே திரு (அப்பர், காரைக்கால் அம்மையார்) ஏற்பட்டது போல நெய்பர்ஸ் பிடித்துவிட்டது. பிரசவத்துக்குப் பின் அந்த நெய்பர்ஸ் இசை வந்த போதெல்லாம் குழந்தைகள் அதை விரும்பின.தொட்டிலில் இருந்தாலும் டி வி யில் அந்த இசை வந்தாலே அவர்கள் அலர்ட் ALERT ஆகிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்தது. ஆக கருவிலே திரு உருவாகும் என்று நமது நாயன்மார்கள் பாடியது உண்மையே. மந்திரங்களின் பொருட்கள் நல்ல விசயமாக இருப்பின் இது குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும்


2. அஷ்டாவக்ரர் கதை: அஷ்டா வக்ரர் என்றால் EIGHT BENDS எட்டு கோணல் என்று பொருள். அந்தக் குழந்தையின் அப்பா தப்புத் தப்பாக வேத மந்திரங்களைச் சொல்லியதால் கருவில் உள்ள போது குழந்தை உதைத்து உதைத்து உடம்பு எட்டு கோணல்களுடன் பிறந்தது. மந்திரங்களுக்கும் சப்தத்துக்கும் விளைவுகள் உண்டு


.3. அகத்தியர் வீணை வாசித்தவுடன் ராவணனின் வீணை உருகிய பாறையில் சிக்கிக்கொண்டது. சப்தத்துக்கு மகத்தான சக்தி உண்டு. உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரையில் மேல் விவரம் காண்க I have written article about it.


4 காஞ்சி சுவாமிகள், சிருங்கேரி சுவாமிகள் காலத்தில் நடந்த ஒரு அதிசயத்தைக் கூறியிருக்கிறார். ஒரு இளைஞனுக்கு மந்திர சக்தி பற்றி சந்தேகம் வந்தவுடன் அவனை நெல்லின் மீது பலகையைப் போட்டு உட்கார்ந்து மந்திரம் சபிக்கச் ஒன்னார். நெல் அந்த வெப்பத்தில் பொறியாக மாறி விட்டது தெய்வத்தின் குரலில் மேல் விவரம் காண்க.


5. தமிழர்கள் மட்டுமே வேதத்தின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள். அதனால் அதை மறை--ரகசியம் SECRET , HIDDEN MEANING, METAPHORICAL, SYMBOLIC என்று மொழி பெயர்த்தார்கள். அதன் சொற்களுக்கு பொருள் தேவை இல்லை. அதன் சப்தம் பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதை எழுதினால் அதன் கற்புத் தனமைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணி வேதத்தை எழுதாக் கற்பு CHASTE BECAUSE NEVER TO BE WRITTEN என்றும் எழுதாக் கிளவி UNWRITTEN WORD என்றும் மொழிபெயர்த்தனர்.


6. எங்கள் ஊருக்கு (Madurai) சிருங்கேரி சுவாமிகள் வந்த போது (இப்போது உள்ளவருக்கு முந்தியவர்) டி வி எஸ் ஸ்கூல் தலைமை ஆசிரியர் வீட்டில் கற்களும் மலமும் வந்து விழுந்து கொண்டிருந்தது. யாரோ அவர்களுக்கு பில்லி சூனிய வினை வைத்திருந்தார்கள். அவர் எவ்வளவோ மலையாள மாந்திரீகம் செய்தும் பலன் இல்லை. இதை சுவாமிகளிடம் சொல்லி அழுதபோது அவர் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை செபிக்கச் சொன்னார். அந்த ப்ரச்சனை அதோடு முடிவுக்கு வந்தது.


7. சுவாமி விவேநந்தரிடம் , பேய் பிசாசு ஆவி உலகம் பற்றிக் கேட்ட போது, அது உண்மைதான். என் உறவினரின் ஆவிகள் என்னைத் தொடர்ந்து வந்தன. ஒரு முறை பிரார்த்தனையில் மிகவும் கடுமையாக வேண்டிக் கொண்டபின் அவைகள் வரவே இல்லை என்று கூறுகிறார்.


நாங்கள் இலண்டனில் உள்ள ஆஸ்பத்திரிகளில் வலி நிவாரணத்துக்கு ஒலி எழுப்பும் வைப்ரேடர்களைப் VIBRATORS TO RELIEVE PAIN பயன்படுத்துகிறோம். இது ஒரு இந்தியரின் கண்டுபிடிப்பு!
 
Dear Vijayaramanathan
Thanks for your comments.

Please read Spaceships and special prayer days and Do Hindus believe in Aliens and ETs?
Other than these there are over 75 interesting articles like ONE MINUTE BHAGAVAD GITA in my blogs and tamilbrahmins.com
Tonight I am uploading Time Travel by Two Tamil Saints . Visit my blogs swamiindology.blogspot.com or tamilandvedas.wordpress.com or my blog section at tamilbrahmins
 
Status
Not open for further replies.
Back
Top