• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.

கோயிலின் வரலாறு:

புராண கதைகள், சன்னதி விபரங்களை காண்போம்...

தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலால் மதுரையும், மதுரைக்காரர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமைக் கொள்ளும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

வீட்டில் என்ன ஆட்சி நடக்கிறது சிதம்பரமா, மீனாட்சியா என கேட்பதுண்டு.

கணவர் ஆதிக்கம் இருந்தால் சிதம்பரம் என்மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்.

கோயில் சுவாமி விபரம்:

மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தர், சொக்கநாதர்

அம்மன் : மீனாட்சி அம்மன்
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரைக் குளம்,தெப்பக்குளம், வைகை, கிருதமால் ஆறு, புறத்தொட்டி


இடம்: மதுரை

தேவாரப்பாடல் படப்பெற்ற தலம்:
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 1
தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 192

கடவுள் சிலைகள் இல்லாத அம்பாடத்து மாளிகா கோயிலின் சிறப்பு தெரியுமா?

திருவிழாக்கள்:

தமிழ் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா.

சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் பவணி புகழ்பெற்றவை.

நவராட்த்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விஷேச நாட்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.


கோயில் சிறப்பு:

சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான்.

சிவ பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார்.

இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்பினார்.

இதனால் தற்போது இந்திரன் விமானம் என அழைக்கப்படுகின்றது.

மரகத மீனாட்சி:

இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.

அதனால் இந்த தலத்தில் தரித்தாலோ, பெயரைப் படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

கால் மாறி ஆடிய நடராஜர்:

சுவாமி சன்னதி நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர்.

மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்குப் பதில், வலது கால் தூக்கு நடனமாடுகிறார்.

மதுரையை ஆண்டு ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார். அவர் சுவாமியை தரிசித்த போது, “இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடதுகால் தூக்கி ஆடுகின்றாயே. எனக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி, கால் மாறி ஆடக் கூடாதா?... அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரை இங்கேயே துறப்பேன்” என்றார்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தன் கிடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடிய அருளினார். நடராஜர் இருக்கும் இடம் பஞ்ச சபைகளுள் ஒன்றான வெள்ளி சபை ஆகும்.

பொற்றாமரைக் குளம்:

நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி, ஈசன் தன் சூலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது இந்த குளம். மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காகப் பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற தலம். இந்த குளத்திற்கு சிவகங்கை என்றும் பெயர்.

இந்த குளத்தில் அமாவாசை, கிரகண காலம், மாதப் பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சுவாமியை தரிசித்தல் வேண்டும்.

ஈசனை மனமுருகிப் பாடிய தேவாரப்பாடலால் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் இது 192வது தேவாரத்தலம் ஆகும்.

அதே போல் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடம் என குறிப்பிடப்படுகின்றது.

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கோபுரங்கள் கட்டப்பட்ட ஆண்டுகள்:
மீனாட்சி அம்மன் கோயில் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது. அதாவது சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

அதன் பின்னர் கோயிலில் உள்ள ஒவ்வொரு கோபுரமும் எந்தெந்த ஆண்டுகளில் கட்டப்பட்டது என்ற விபரத்தைப் பார்ப்போம்...

1168 ஆண்டு முதல் 1175 ஆண்டு வரை சுவாமி கோபுரம்
1216 ஆண்டு முதல் 1228 ஆண்டு வரை கிழக்கு ராஜ கோபுரம்
1627 ஆண்டு முதல் 1628 ஆண்டு வரை அம்மன் சன்னதி கோபுரம்
1315 ஆண்டு முதல் 1347 ஆண்டு வரை மேற்கு இரா கோபுரம்

1372 ஆண்டு : சுவாமி சன்னதி கோபுரம்
1374 ஆண்டு : சுவாமி சன்னதி வெஸ்ட் கோபுரம்
1452 ஆண்டு : ஆறுகால் மண்டபம்
1526 ஆண்டு : 100 கால் மண்டபம்

1559 ஆண்டு : தெற்கு ராஜ கோபுரம் முக்குருணி விநாயகர் கோபுரம்
1560 ஆண்டு: சுவாமி சன்னதி நார்த் கோபுரம்
1562 ஆண்டு : தேரடி மண்டபம்
1563 ஆண்டு : பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம்
1554-72 வடக்கு ராஜா கோபுரம்

1564 - 72 வெள்ளிக் அம்பாள் மண்டபம் கொலு மண்டபம்
1569 ஆண்டு : இதர கோபுரம் ஆயிரங்கால் மண்டபம் 53 நாயன்மார்கள் மண்டபம்
1570 ஆண்டு : அம்மன் சன்னதி மேற்கு கோபுரம்
1611 ஆண்டு :வீர வசந்தராயர் மண்டபம்
1513 ஆண்டு : இருட்டு மண்டபம்

1623 ஆண்டு : கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
1623 - 59 ஆண்டு : ராயர் கோபுரம், அஷ்ட சக்தி மண்டபம்
1626 -45 ஆண்டு : புது மண்டபம்
1535 ஆண்டு : நகரா மண்டபம்
1645 ஆண்டு : முக்குருணி விநாயகர்

1659 ஆண்டு : பேச்சியம்மாள் மண்டபம்
1708 ஆண்டு : மீனாட்சி நாயக்கர் மண்டபம்
1975 ஆண்டு : சேர்வைக்காரர் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்:

கோயிலின் சுவாமி சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளது ஆயிரங்கால் மண்டபம். கோயிலின் மற்ற மண்டபங்களை விட மிக பிரமாண்டமாக அளவின் பெரிதாக காணப்படுகின்றது.

இதனை 1494ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவரின் அமைச்சரான அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது

இந்த மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என அழைக்கப்பட்டாலும் உள்ளே 985 தூண்கள் மட்டும் உள்ளன.

இதில் 22 இசை எழுப்பக்கூடிய சிறிய தூண்கள் உள்ளன. இருப்பினும் தூண் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

முக்குறுணிப் விநாயகர் :

மீனாட்சி அம்மன் கோயிலில் சில சன்னதிகளை கட்ட திருமலை நாயக்கர் மன்னன் முடிவு செய்து, ஊருக்கு வெளியே மண் எடுத்தார். அதுதான் தற்போது வண்டியூர் தெப்பக்குளமாக உள்ளது. இங்குமண் எடுக்கும் போது இந்த முக்குறுணி விநாயகர் கிடைத்தது.

அதை மீனாட்சி அம்மன் கோயிலிலேயே மீனாட்சி சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடையே கிளிகூண்டு மண்டபத்துக்கு வடக்கு பகுதியில் தனி சன்னதியில் முக்குறுணி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் மிக சிறப்பாக இந்த விநாயகர் சிலை முன் கொண்டாடப்படுகின்றது.

முத்தமிழ் பறைசாற்றும் கோயில்:

இந்த கோயிலில் உள்ள சிலைகள் அமைப்பு இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் விவரிக்கும் விதமாக உள்ளது.

கோயிலில் உள்ள பல்வேறு சிலைகள், ஓவியங்கள் பல்வேறு இலக்கியங்களை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது.

இங்குள்ள பல தூண்களும், சிலைகளும் இசை பாடக்கூடியது.
பல நடனச் சிற்பங்கள், நாடகச் சிற்பங்கள் அமைந்து முத்தமிழை முழுவதுமாக உரைக்கின்றது.

வழிபாடு:

மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வணங்கினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவர்.

திருமணம், குழந்தை பக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர்.
மதுரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும், மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு அல்லது, சுப காரியம் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த கோயிலுக்கு வந்து மீனாட்சி அம்மன், சொக்கநாதரை தரிசித்தால் மன நிம்மதி ஏற்படும். சுவாமி பிரகாரத்தில் ஓம் எனும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேடும் அளவிற்கு மிக அமைதியாக இருக்கும்.

மன அமைதி, நிம்மதி வேண்டுவோர், கோயில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.

பிரசாதம்:

மிக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், இதுவரை குறிப்பிடும்படி எந்த ஒரு தனி பிரசாதங்கள் இல்லாமல் இருந்தன. இப்போது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலைப் போல லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

கோயில் திறக்கும் நேரம் :

காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 10 மணி
 

Latest ads

Back
Top