மச்சினனின் மகத்தான பார்வை....... [ A Whatsapp post..]

kk4646

Active member
எனக்கு திருமணமான வருடம்.

தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை பயன்படுத்துவேன்.

வாசல் வரண்டாவில் சைக்கிளை வைத்திருப்பேன். கீழே ரோட்டிற்கு இரங்க மொத்தம் நான்கு படிகள். தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை கீழே இறக்க வேண்டும்.

காலில் செருப்போடு சைக்கிளை இறக்கினால் சறுக்கி விட்டு விடும். எனவே காலில் செறுப்பு இல்லாமல் சைக்கிளை கீழே இறக்குவேன்.

என் மனைவி, என் செருப்புகளை கையில் எடுத்து கீழே தருவாள். நான் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு சைக்கிளில் அலுவலகம் செல்வேன்.

இது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகும்.

ஒரு நாள் என் மைத்துனன் எங்கள் வீட்டிற்கு மூன்று நாட்கள் தங்குவதற்கு வந்தான்.

நான் தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை எடுப்பதையும், என் மனைவி என் செருப்புகளை கையில் எடுத்து கீழே கொடுப்பதையும் கவனித்து வந்தான்.

மூன்று நாட்கள் கழித்து, ஊருக்குப்போனவனை என் மாமனார் அத்திம்பேர் எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவன் சொன்ன பதில்....

* உங்க மாப்பிள்ளை* மற்ற விஷயங்களில் நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் *"அக்கா கையில் செருப்பை எடுத்தால்தான் அத்திம்பேர் ஆபீஸ் போகிறார்"".... *
 
Back
Top