P.J.
0
மகாபாவங்களையும் மன்னித்தருள்வான் மகால
மகாபாவங்களையும் மன்னித்தருள்வான் மகாலிங்கப் பெருமான்
திருவிடைமருதூர்
ஒரு தலத்துக்குச் சிறப்பு தருவது மூர்த்தி-தலம்- தீர்த்தம். பூலோக கைலாயம் என போற்றப்படும் திருவிடைமருதூர் திருக்கோயில், பிரம்மன் பிரதிஷ்டை செய்த மூர்த்தியைக் கொண்டிருப்பதால் மிகவும் சிறப்புடையதாகிறது. இந்திரன் உண்டாக்கிய தீர்த்தம், வருணன் மற்றும் வாயு பூஜித்து வழிபட்ட தலம், ஆதிசக்தியின் மத்திய ஸ்தானத்தை உணர்த்திப் பின்பு அந்த இருதய கமல மத்தியில் தியானிக்கப்பட்டு முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் காட்சியளித்தற் பொருட்டு இங்கே எழுந்தருளியிருப்பதால் இத்திருத் தலத்திற்கு திருவிடைமருதூர் என்று பெயர் வந்தது.
மருத மரங்கள் நிறைந்திருந்ததாலும் மருதூர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு! காலனைக் காலால் எட்டி உதைத்து என்றும் பதினாறாய் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயருக்கு, இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் தரிசனம் கொடுத்தது இத்தலத்தில்தான். மழலைப் பேறு வேண்டிய சுகீர்த்தி என்ற மன்னன் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து புனித நீர்களில் நீராடி இறைவனைத் தொழுது, புத்திரப்பேறு பெற்றான். அஷ்டமாசித்தியைப் பெற விரும்பிய வசிஷ்டர் முதலான பெருமுனிவர்களுக்காக முருகன் கங்காதேவியைப் பிரார்த்திக்க, அவள் மூலஸ்தானத்துக்கு வடகிழக்கில் ஒரு கிணறு வடிவாய் அமர்ந்தனள்.
குமாரக் கடவுள் அந்தக் கங்கா தீர்த்தத்தை எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தார்; முனிபுங்கவர்களின் விருப்பமும் நிறைவேறியது. காஸ்யப முனிவருக்காக மகாலிங்க ஈசனே பாலகிருஷ்ணனாகத் தோன்றி ஆயர்சேரியில் ஆடிய ஆட்டத்தை விளையாட்டைக் காட்டினார். இன்றும் ப்ரணவப் பிராகாரத்திலுள்ள தலவிருட்சத்தின் கீழ் காஸ்யப வழிபட்ட கண்ணனின் திருவுருவத்தைக் காணலாம். வரகுணபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு மாலைப் பொழுதில் அவனுடைய குதிரை, வழியில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த வைதீக பிராமணனை, இடறிக் கொன்று விட்டது. இதை அறியாது, மன்னன் அரண்மனையில் நுழைய, கூடவே பிரம்மஹத்தி தோஷமும் அவனைப் பற்றி வருத்தியது.
இந்த தோஷம் நீங்க பலவாறு முயற்சித்த அவன் இறுதியாக தனது குலதெய்வமான சோமசுந்தரக் கடவுளை வேண்ட, அவர் ‘திருவிடைமருதூர் சென்றால் பிரம்மஹத்தி தோஷம் உடனே நீங்கும்’ எனக்கூற, பாண்டியனும் அங்கே சென்று இறைவனைத் தொழுது தோஷம் நீங்கப் பெற்றான். மகாலிங்கப் பெருமானுக்கு கயிலையங்கிரியின் கொடுமுடிக்கு இணையான ஒரு மதிலைக் கட்டினான், வரகுணன். அதை வலம் வந்தால், ஆயிரம் பிரதட்சணத்திற்கு சமானமானதாகும். இத்தலத்தின் சிறப்பு அம்சம் இங்குள்ள மாபெரும் பிராகாரமே.
சோழ நாட்டில் உறையூரில் ஹம்ஸத்துவஜன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு வெகு நாட்களாக கங்கையில் நீராட ஆசை! அது இயலாதென்பதை உணர்ந்து பிராமணன் ஒருவனை அழைத்து, தன் பொருட்டுக் கங்கா ஸ்நானம் செய்து அந்தப் பலனை தனக்கு அருளும்படி வேண்டினான். அந்த அந்தணன் தன் இளம் மனைவியைப் பிரிய மனதில்லாமல் தயங்கியபோது, ‘உமது மனைவியைப் பாதுகாப்பது என் கடன்,’ என்று கூறி, அந்த அந்தணனை அனுப்பி வைத்தான். தான் கொடுத்த வாக்கின்படி அந்தணனின் மனைவியைப் பாதுகாத்தும் வந்தான்.
காசிக்குச் சென்ற அந்தணன் கங்கையில் ஸ்நானம் செய்து, காவடியில் புனித நீரைத் தாங்கி உறையூரை அடைந்தான். மறுநாள் காலையில் அரசனைக் காணலாம் என்று எண்ணி, அன்றிரவு வீட்டில் தங்கி, மனைவியிடம் கங்கா யாத்திரை பற்றி விவரித்துக்கொண்டிருந்தான். மாறு வேடத்தில் வந்த மன்னன், அந்தணனின் குரலை மாற்றான் குரல் எனத் தவறாக எண்ணி, வீட்டினுள் புகுந்து அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அதனால் பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றியது. தோஷம் நீங்க வழி தெரியாத மன்னன் பெரியோர்களின் யோசனைப்படி, திருவிடைமருதூர் வந்து புஷ்ப தீர்த்தம், காருண்யாமிர்தத் தீர்த்தம் இரண்டிலும் நீராடி, கீழைக் கோபுர வாயிலின் வழியே ஆலயத்தில் புக, பிரம்மஹத்தி கோபுரத்திற்கு வெளியே நின்று விட்டது.
மன்னன் மகிழ்வுடன் மகாலிங்கத்தைத் தரிசித்துவிட்டு ஊர் திரும்பினான்! திருவிடைமருதூரில் மொத்தம் 35 தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது காருண்ய தீர்த்தம். வேதத் தியானம் செய்யாத பிராமணன், சிவலிங்கத்தையும், பெண்களையும் விற்றவன், கொலை மற்றும் களவு செய்தவன், மாதா-பிதாவை இகழ்ந்த பாபிகள் இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் பாவம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தில் மூன்று பெரிய பிராகாரங்கள் உள்ளன: அசுவமேதப் பிரதட்சிணப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம், பிரணவப் பிராகாரம்.
அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்து தொழுவோர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவர் என்று தலபுராணம் கூறுகின்றது. ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைதத்தை நிலைநாட்ட பல தலங்களைத் தரிசித்து வரும்போது திருவிடைமருதூருக்கு வந்து இறைவனைத் தொழுதார். அந்தச் சமயத்தில் கர்ப்பக்கிரகத்தின் உள்ளிருக்கும் மகாலிங்கமூர்த்தியிடமிருந்து ‘அத்வைதம் சத்யம்’ என்று மும்முறை ஒலித்த குரல் ஆதிசங்கரரை வாழ்த்தியது. இந்தச் சம்பவத்தை விளக்கும் மகாலிங்க மூர்த்தியின் சிலை ஒன்றைத் திருவிடைமருதூர் காஞ்சி சங்கர மடத்தில் இன்றும் நாம் காணலாம். சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்றான திருவிடை மருதூர் சென்று மகாலிங்க மூர்த்தியையும், அம்பாள் பிரஹத் சுந்தரகுஜாம்பிகையையும் வணங்கி நற்பேறு பெறுவோம்.
கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
- மேவானி கோபாலன்
Forgive sins for great lord mahalingap perumal |??????????????? ???????????????? ?????????? ???????? -Aanmeega Dinakaran