மகாசிவராத்திரி
பாற்கடலில் தோன்றியது நஞ்சும் - அதன்
பாதிப்பு உலகையே மிஞ்சும்
பரமசிவனின் கருணை நெஞ்சம் - அதனால்
பாதுகாக்கப் பட்டதிந்த பிரபஞ்சம்
நன்றி செலுத்த வேண்டி நாமும் - சிவனுக்கு
நயமா யிருப்போம் விரதம்
நமச்சிவாய என்னும் நாமம் - உலகில்
நம்மைக் காக்கும் என்றும்
ஐந்தெழுத்து மந்திரம் போதும் - வாழ்வில்
ஐயங்கள் யாவும் நீங்கும்
ஐங்கரன் தந்தையின் ஆசிவேண்டும் - அதற்கு
ஐம்புல னடக்கம் வேண்டும்
அண்ணா மலையானின் அருள் - அது
அகற்றிவிடும் அறியாமை இருள்
அரஹர சிவசிவ சொல் - அண்ட
அகிலத்திற்கும் அதுவே பொருள்
ஓதற்கு அரியானை ஓதுவோம் - வாழ்வில்
ஒருநாளும் அவன்துதி மறவோம்
ஒப்பில்லா நாயகனைப் பாடி - ஆசைகளை
ஒதுக்கி வைத்து வாழ்வோம்
வாரணாசியில் வாசம் செய்வோனே - எங்கள்
வக்கிரங்களை நாசம் செய்வோனே
வணக்கங்கள் உனக்குச் செய்தோமே - நல்
வளங்களருளும் விபூதி சுந்தரனே
குமரனிடம் கேட்டாய்நீ பாடம் - இச்சிவ
குமார் பணிந்தேனுன் பாதம்
குன்றாத பக்தி போதும் - என்
குறைகள் மறைந்து போகும்
02 -03 -2011 மகாசிவராத்திரி அன்று எழுதியது
பாற்கடலில் தோன்றியது நஞ்சும் - அதன்
பாதிப்பு உலகையே மிஞ்சும்
பரமசிவனின் கருணை நெஞ்சம் - அதனால்
பாதுகாக்கப் பட்டதிந்த பிரபஞ்சம்
நன்றி செலுத்த வேண்டி நாமும் - சிவனுக்கு
நயமா யிருப்போம் விரதம்
நமச்சிவாய என்னும் நாமம் - உலகில்
நம்மைக் காக்கும் என்றும்
ஐந்தெழுத்து மந்திரம் போதும் - வாழ்வில்
ஐயங்கள் யாவும் நீங்கும்
ஐங்கரன் தந்தையின் ஆசிவேண்டும் - அதற்கு
ஐம்புல னடக்கம் வேண்டும்
அண்ணா மலையானின் அருள் - அது
அகற்றிவிடும் அறியாமை இருள்
அரஹர சிவசிவ சொல் - அண்ட
அகிலத்திற்கும் அதுவே பொருள்
ஓதற்கு அரியானை ஓதுவோம் - வாழ்வில்
ஒருநாளும் அவன்துதி மறவோம்
ஒப்பில்லா நாயகனைப் பாடி - ஆசைகளை
ஒதுக்கி வைத்து வாழ்வோம்
வாரணாசியில் வாசம் செய்வோனே - எங்கள்
வக்கிரங்களை நாசம் செய்வோனே
வணக்கங்கள் உனக்குச் செய்தோமே - நல்
வளங்களருளும் விபூதி சுந்தரனே
குமரனிடம் கேட்டாய்நீ பாடம் - இச்சிவ
குமார் பணிந்தேனுன் பாதம்
குன்றாத பக்தி போதும் - என்
குறைகள் மறைந்து போகும்
02 -03 -2011 மகாசிவராத்திரி அன்று எழுதியது
Last edited: