`மகர சங்கராந்தி' கொண்டாடப்படுவதன் பின்புலம் என்ன?

`மகர சங்கராந்தி' கொண்டாடப்படுவதன் பின்புலம் என்ன?

நமக்கு அனுதினமும் ஆற்றலைத் தந்து காத்தருளும் சூரிய பகவான் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதமானதால், தை மாதம் மிகுந்த ஆற்றல் உடையது.

1578705608884.png

மகர சங்கராந்தி

சூரியனின் மகர ராசி பிரவேசத்துக்கு மட்டும் என்ன முக்கியத்துவம்? அன்றைய தினத்தை மட்டும் மகர சங்கராந்தி தினமாகக் கொண்டாடுவது ஏன்?


சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்: "தேவர்களின் பகல் உத்தராயனம் என்றும் இரவு தட்சிணாயனம் என்றும் அறியவும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயனம்; ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம். தை மாதப் பிறப்பு அதாவது தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியனின் பிரவேசமாகும் நாள், நமக்கு மிகுந்த அருளை அளிப்பதால், அன்றைய தினம் மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது.

ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களுக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கும் உத்தராயன புண்ணிய காலம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் தற்கால விஞ்ஞானிகளைக் காட்டிலும் ஆழ்ந்த ஞானம் உடையவர்கள். இதை ஏதோ வெறும் வார்த்தைகளாக எண்ண வேண்டாம். இந்த நாளில் கிரகணம் ஏற்படும் என்று பஞ்சாங்கங்களில் கணக்கிட்டுக் கொடுத்திருப்பது முதல் ஆண்டு பலன்கள் வரையிலும் அவர்களின் வார்த்தைகளின்படியே நடந்து வருகின்றன.

மேலும் படிக்க

நன்றி: vikatan.com
 
Back
Top