• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

போதமலை: இது உண்மையா?

Status
Not open for further replies.
போதமலை: இது உண்மையா?

சங்கப் புலவரின் பல்துறை அறிவு என்ற புத்தகத்தின் 49ஆம் பக்கத்தில் உள்ள விஷயம் உண்மையா? (இந்தக் கட்டுரையை எழுதியவர் நாமக்கல் ட்ரீனிடி கல்லூரி முனைவர் சு..பார்வதி)


நாமக்கல் மாவட்டத்தில் போதமலை என்ற கிராமத்தில் இன்றும் சங்க கால வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இயற்கை எழிலும் பழங்களின் பழ ரசமும் மக்களின் வாழ்க்கை முறைகளும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றன. மின்சாரம் கிடையாது. அகல் விளக்குகளில் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிக்கு உரியதாக ஒளிர்விடுகிறது. 10 கிலோமீட்டர் வரை உள்ளே நடந்து செல்ல வேண்டும். ஒரு சிறிய பள்ளிக்கூடம் உள்ளது. இங்கே கனிகள் எல்லா வகையும் கிடைக்கின்றன.உணவே பெரும்பாலும் கனிகளாக உள்ளது. தினை, மூங்கிலரிசி போன்றவற்றையும் உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். சங்க கால மக்களின் வாழ்க்கை போதமலையில் எதிரொலிக்கிறது, பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதைப் படித்தவுடன் அங்கு போய்ப் பார்க்கவேண்டும் ,ரிடையர் ஆனவுடன் அங்கே சென்று வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இதுபோல வேறு இடங்கள் இருந்தாலும் சொல்லுங்கள் தமிழகம் வரும்போது பார்க்கிறேன். பொன்னியின் செல்வனைப் படித்தவுடன் ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழவேண்டும், விபூதிபூஷன் வந்தோபாத்யாயா எழுதிய வனவாசி (ஆரண்யநிவாஸ்) நாவலைப் படித்தவுடன் காட்டில் அவனைப் போல (யுகல் பிரசாத்) சுதந்திரமாகத் திரிந்து இயற்கையை ரசிக்க வேண்டும் போல எல்லோருக்கும் தோன்றுகிறதல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top