பைரவர் வழிபாடு

praveen

Life is a dream
Staff member
பைரவர் வழிபாடு

சனிக்கிழமை பைரவர் வழிபாடுசனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்கதுன்பங்களில் இருந்து விடுபட பைரவரை சரணடைய வேண்டும்!ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே துணை!



பைரவர் வழிபாடுதாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே .


இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் .பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்


சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்


திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது


64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)
சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:


சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்


ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே துணை
 
Back
Top