பூசணி தயிர் சாதம்

Status
Not open for further replies.
பூசணி தயிர் சாதம்

பூசணி தயிர் சாதம்

April 21, 2015


poosani_2380908f.jpg



என்னென்ன தேவை?



துருவிய பூசணிக்காய் 1 கப்
தயிர் அரை கப்
துருவிய இஞ்சி அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிதளவு
கடுகு, உளுந்து அரை டீஸ்பூன்
எண்ணெய் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?



துருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

அதில் தயிரைக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்துப் பூசணிக்காயில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.

இந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.


பூசணிக்காயில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் பானகமாகக் குடிக்கலாம்.

????? ????? ????? - ?? ?????
 
Status
Not open for further replies.
Back
Top