புறநானூற்றில் காமாக்ஷி

Status
Not open for further replies.
புறநானூற்றில் காமாக்ஷி

புலவர் காமாக்ஷி பற்றி காஞ்சிப் பெரியவர்

தெய்வத்தின் குரல், ஆறாம் பாகம்- பக்கம் 857/858:

மணிமேகலை காஞ்சீபுரத்துக்கு வந்து அக்ஷய பாத்திரத்தினால் ஆஹாரம் போட்டாள் என்று சொல்லி இருக்கிறது. அது பௌத்த மத சார்பான காவியம். அதனால் மணிமேகலை ஒரு பௌத்த குருவிடம் தீக்ஷை பெற்றே வாழ்க்கைப் பயனை அடைந்தாள் என்று இருக்கிறது. ஆனால் அக்ஷய பாத்திரத்திலிருந்து அவள் அன்னம் போட்ட ஸமாசாரமோ நம்முடைய அம்பாள் காமாக்ஷி பண்ணிய லீலையை காப்பி பண்ணியதாக இருக்கிறது ! “இரு நாழி நெல் கொண்டே எண் நான்கு அறம் இயற்றியவள்” என்று காமாக்ஷியைப் பற்றி ஒரு புராண வசனம் இருக்கிறது. நாழி என்றால் அரைப்படி. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்று அவ்வை பாட்டில் கூட வருகிறது அப்படிப்பட்ட இரு நாழி ( ஒரு படி) அரிசி அக்ஷயமாக வளர அதைக் கொண்டே அன்ன தானம் மட்டுமில்லாமல் இன்னும் முப்பத்தோரு தர்மங்களும் பண்ணிணாளாம். அறுபத்து நாலு தர்மம் என்று ஒரு கணக்கு. அதில் வராத தர்மமே இல்லை. அதைப் பாதியாகக் கன்டென்ஸ் பண்ணி முப்பத்திரண்டு என்பதுமுண்டு. அதைதான் “எண் நான்கு அறம்” என்றது. மணிமேகலை கதையை வைத்துதான் காமாக்ஷி புராணம் எழுதி விட்டார்கள் என்று கூட இந்த நாளில் சொல்லலாம் ! ஆனால் காமக்ஷியின் பெயர மணிமேகலை எழுதியதற்கு ரொம்ப முந்தி சங்க கலத்திலேயெ இருந்திருக்கிறது. காமக் கண்ணியார் நப்பசலையார் என்று சங்க கால பெண் புலவர் ஒருத்திக்குப் பேர். காமக்கண்ணி என்பது காமாக்ஷியேதான் ! காமாக்ஷி வழிபாடு அப்போதே உண்டு என்றால் அந்தக் காமாக்ஷி கதையும் அவள் அன்ன தானம் முதலானது பண்ணிய கதையும் அப்போதே இருந்து தானிருக்கவேண்டும்.

(சௌந்தர்யலஹரியின் “க்வணத் காஞ்சீ தாமா கரி களப கும்ப”—என்ற ஸ்லோகத்துக்கான விளக்கத்தில் காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் இப்படிப் பேசியிருக்கிறார்.)

புறநானூற்றின் பழைய பதிப்புகள், இரண்டாவது உலகத் தமிழ் நாட்டு மலர் ஆகிய அனைத்திலும் காமக் “கண்ணியார்” என்றே உள்ளது. அபிதான சிந்தாமணி (பக்கம் 1503), இந்தப் புலவரின் பெயரைக் காமாக்ஷி என்றும் கூறுகிறது. சிலர் இதைக் கணி என்று திருத்தியுள்ளனர். அது தவறு.
 
Status
Not open for further replies.
Back
Top