புதினா ரசம்.

Status
Not open for further replies.
புதினா ரசம்.

தேவையான பொருட்கள்:


தக்காளி பெரியது -1

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

புதினா தழை - ஒரு கைப்பிடி அளவு

வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் அளவு

தண்ணீர் 1 1/2 அல்லது 2 கப்


தாளிப்பதற்கு:


நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வற்றல் மிளகாய் - 2

பெருங்காயம் - ஒரு சிட்டிகை


செய்முறை:


புளியை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்

தக்காளி, சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதுடன், புளிக்கரைசல், ஒன்றுக்கு ஒண்ணரை விகிதம் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இத்துடன் உப்பு சேர்த்து, தனியே எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காய்ச்சி கடுகு, வற்றல் மிளகாய் இவற்றை தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன், தக்காளி கரைசலை புதினா இலைகள், வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

ரசம் நுரை பொங்கும்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அதிகமாக கொதிக்க விட வேண்டாம்,

சுவையில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

சுவையான ரசம் தயார், பாத்திரத்திற்கு மாற்றி டைனிங் டேபிளில் வைத்து விட்டால் சாப்பிட சுவையான புதினா ரசம் தயார். இது மற்ற ரசங்களைப் போலல்லாமல், மிகுந்த மணத்துடன் இருக்கும். சுவையும் அருமை



Source: S. v. Ramani
 
Actually we can add a few pudina leaves to paruppu rasam and it would do the trick. Add some garlic for added taste !
 
Status
Not open for further replies.
Back
Top