பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

Status
Not open for further replies.
பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

madurai+pillayar.jpg



உங்களுக்குப் பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்குமா என்பதற்கு இதோ ஒரு சோதனை. ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள். இருபது கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அருள் உண்டு. குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தால் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் பல துதிகளை ஆழமாகப் படியுங்கள். அருள் சுரக்கும்.


1.பால்,தேன்,பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?
2.சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?
3.”முன்னவனே யானை முகத்தவனே,முக்தி நலம் சொன்னவனே”---- என்று விநாயகரைத் தொழுதவர் யார்?
4.பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?
5.”கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி”---- என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?
6.பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?
7.”வாதாபி கணபதிம் பஜே” என்ற கிருதியை இயற்றியவர் யா?
8. “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையோடு பாடியவர் யார்?
9.”முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்”….என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?
10.”கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்”…… என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?

beauty+pillayar.jpg



11. “வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை” என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?
12.விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?
13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் அவ்வையார் கைலாசம் சென்றது எப்படி?
14.மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?
15.வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப்பெரியார் யார்?
16.”.திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்”…….. என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?
17. “பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு”…என்று பாடியவர் யார்?
18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?

19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?
20.நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?


sangu+pillayar.jpg


விடைகள்: 1.அவ்வையார் 2.விநாயகர் அகவல் 3.அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 4.வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம் 5.அருணகிரிநாதர் 6. திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி 7.முத்து சுவாமி தீட்சிதர் 8.பாரதியார் 9.கணேச பஞ்ச ரத்னம் 10.ரிக் வேதம் 11.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்…………. என்ற மந்திரம் 12. சுமுகன், ஏகதந்தன், கபிலன்,கஜகர்ணன்,லம்போதரன்,விகடன்,விக்னராஜன், விநாயகன்,தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன்,ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன் 13.பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார் 14.இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில்,சித்தடெக் சித்தி விநாயகர் கோவில், பாலி வல்லாலேஸ்வர் கோவில், மஹத் வரத விநாயகர் கோவில்,தேவுர் சிந்தாமணி விநாயகர் கோவில்,லென்யாத்ரி கிரிஜாத்மஜ விநாயகர் கோவில்,ஓஜார் விக்னேஸ்வரர் கோவில்,ரஞ்சன்காம் மஹாகணபதி கோவில் 15. சிறுத்தொண்ட நாயனார் 16.கந்தபுராணன் 17.திரு ஞான சம்பந்தர் 18.சித்தி, புத்தி தேவியர் 19. எருக்கம் பூவும், கொழுக்கட்டையும் (மோதகம்) 20.திருமூலர்


உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).ராமாயண வினா விடை (க்விஸ்) (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil சைவம் க்விஸ் (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz
 
Status
Not open for further replies.
Back
Top