பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ?

Status
Not open for further replies.

shridisai

You Are That!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ?



பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10:
தற்காலத்தில் ஒருவர் இறந்துபோயின் அவரைப் பற்றி
குறிப்பிடும் பொழுது அவர் இறைவனடி சேர்ந்தார் என்றே
குறிப்பிடுவார்கள். அவ்வாறாயீன் வள்ளுவர் கூற்றின்படி
இத்தகையோர் அனைவரும் பிறவி என்னும் பெரும் கடலை
கடந்தவர்கள் என்று பொருள் கொளல் ஆகாது ?
வள்ளுவர் கூறும் பிறவிப் என்னும் பெரும்கடலில் இம்
மானுடப்பிறவி மட்டுமின்றி கணக்கற்ற எண்ணிலடங்கா
பிறவிகளும் அடக்கம். இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு
இறப்பவர்கள் அனைவரும் நீந்தாதவர்கள்.அதாவது இப்பிறவிக்
கடலை கடக்க, நீந்த முயற்சிக்காமல், இறந்து மீண்டும் மீண்டும்
பிறந்து அதே பிறவி என்னும் பெரும் கடலில்,, கடலில் அகப்பட்ட கட்டையாய், திருமூலரின் திருமந்திரச்சொல் படி

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே. 1649

தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். அதாவது எவ்வாறு கடலில்
அகப்பட்ட கட்டையானது கடல் அலையால் அலைகழிக்கப் பட்டு
அங்குமிங்கும் திக்கு தெரியாமல் மிதந்து கொண்டே இருக்குமோ,
அவ்வாறே நீந்தார் எனப்படுபவர்கள் ,பிறவிப் பெரும்கடலின்
அலையால் அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டு மாறி,மாறி
ஏதோ ஒன்றாய் பிறந்து,இறந்து மறுபடியும் பிறந்து கொண்டே
இருப்பார்கள். இத்தகைய நீந்தார் எனப்படுபவர்கள் இறைவனடி
சேரார்.

அ ஃதின்றி இவ் இயற்கைக்கு மாற்றாக அருட்பிரகாச வள்ளலாரின்
அருள்வாக்கின்படி மரணமில்லாப் பெருவாழ்வு நிலையினை
அடையப் பெற்றவர்கள் இப்பிறவி என்னும் பெரும்கடலை
நீந்தியவர்களாய் இறைவனடி சேர்ந்தவர்களாவர்கள். .மேலும்
இவ்வாறு நீந்த கைவரப்பெற்ற இத்தகையோர்,இப்பிறவிப் பெரும்கடலை
கடக்க முயல்பவர்களுக்கும் உறுதுணையாக இருந்து உதவிக்கரம் நீட்டி
அவர்களையும் கைதூக்கி விடுபவர்களாகவே இருப்பார்கள் என்னும்
பொருள்படவே வள்ளுவர் இக்குறளை நமக்கு அருளியுள்ளார்.

Sairam
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top