பிறப்பும் இறப்பும்

Status
Not open for further replies.
பிறப்பும் இறப்பும்

பிறப்பு என்பது ஆத்மா உடலை எடுப்பது இல்லை. அது உடல் ஆத்மாவை நோக்கி வைக்கும் முதல் படியாகும். ஞானமார்கத்தில் குரு தீக்ஷையே பிறப்பாகும். பக்திமார்கத்தில் பிறப்பு என்பது விவரிக்க முடியாதது. ஞானமும் பக்தியும் எப்படி மனிதன் வளருகிறானோ அதே மாதிரி வளரும். எப்படி மனிதன் தனது உடல் வளர்ச்சியை தினசரி அறியமுடியாதோ அதே போல் பக்தியும் தியானமும் தினசரி வளர்ந்தாலும் மனத்தினால் அதனை அறியமுடியாது. அது அந்த சாதகன் / பக்தனின் நடை, உடை, பாவனை, பேச்சு, எண்ணம், சொல் போன்ற எல்லாவற்றிலும் வெளிப்படும். இந்த வளர்ச்சி மிக நுட்பமானது எனவே அது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு. தெரியாது. அனால் குருவிற்கு தெரியும். ஏனெனில் அந்த பாதையில் பலமுறை அதை கடந்து அதில் விளையாடி அதில் கலந்திருப்பார். இறப்பு என்பது ஒரு பொய்யான நிகழ்வு. அது பொது உலகில் உடலை ஆத்மா நீங்கும் நிகழ்வு ஆகும். ஆத்மா பிறப்பதில்லை எனவே அழிவதில்லை. அது எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் உள்ளதாகும்.

அது தானே தன்மயமாய் தன்னோளியாய் தனியாக நிற்கும்
அதுவே கண்களுக்கு காணும் சக்தியாகிறது (சக்தியை தருகிறது)
அதுவே மூக்கிற்கு முகரும் சக்தியாகிறது (சக்தியை தருகிறது)
அதுவே நாக்கிற்கு சுவைக்கும் சக்தியாகிறது (சக்தியை தருகிறது)
அதுவே மனதிற்கு எண்ணும் சக்தியாகிறது (சக்தியை தருகிறது)
 
Status
Not open for further replies.
Back
Top