• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே -A poem from Tamil literature

Status
Not open for further replies.
பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே -A poem from Tamil literature

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே -A poem from Tamil literature

பிள்ளை இல்லை என்றால் அது ஒரு கவலை.

பெற்ற பிள்ளையை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை என்றால் அது எவ்வளவு துன்பமாக இருக்கும் ஒரு தாய்க்கு ?

தேவகி கண்ணனை பெற்றாள் .

பெற்ற அன்றே அவனை ஆயர்பாடிக்கு அனுப்பி விட்டாள் .

அவனை, கொஞ்சி கொஞ்சி வளர்த்தது எல்லாம் யசோதைதான்.

தேவகி, கண்ணனை தாலாட்டி , சீராட்டி , கொஞ்சி வளர்க்க முடியவில்லையே என்று உருகி வருந்திப் பாடுவதாக குலசேகர ஆழ்வார் பத்துப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் வரும்.

பாடல்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

சீர் பிரித்தபின்

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ, அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று உன்னை என் வாயிடை
நிறைய தால் ஒலித்திடும் திருவினை இல்லாத் தாயரில் கடையாயின தாயே

பொருள்

ஆலை = ஆலையில்

நீள் கரும்பு = நீண்ட கரும்பு

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

அம்புயத் = அன்புஜம், தாமரை போன்ற

தடங் = அகன்ற

கண்ணினன் தாலோ = கண்ணினைக் கொண்டவனே தாலேலோ

வேலை = கடல்

நீர் = நீர்

நிறத்து = நிறம்

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

வேழப் = யானை

போதகம் = குட்டி

அன்னவன் தாலோ = போன்றவனே தாலேலோ

ஏலவார் குழல் = மணம்மிக்க முடியை உடைய

என் மகன் தாலோ = என் மகனே தாலேலோ

என்று = என்று

உன்னை = உன்னை

என் வாயிடை = என் வாயால்

நிறைய = நிறைய

தால் ஒலித்திடும் = தாலாட்டுப் பாடிடும்

திருவினை = திருவினை , புண்ணியம்

இல்லாத் தாயரில் = இல்லாத தாயரில்

கடையாயின தாயே = மிக கடைப் பட்டவள் நானே

கரும்பு போல இருப்பானாம்....கண்ணன் தலையில் மயில் பீலி செருகி இருப்பான். கருப்பாய் இருப்பான். அது போல கரும்பும் கருப்பாய் தலையில் தோகையோடு இருக்கும். பொருத்தமான உதாரணம்.

கண்ணன், பாலும், வெண்ணையும், நெய்யும் தின்று குண்டு குண்டாக கறுப்பாக இருப்பன் அல்லவா ...எனவே யானைக் குட்டி என்றாள்.

தால் என்றால் நாக்கு என்று பொருள்.

தால் + ஆட்டு = தாலாட்டு.

தாய்மார்கள், குழந்தையை தூங்கப் பண்ண "ரோ ரோ...",. "லா லா " என்று நாக்கை அசைத்து ஒலி எழுப்புவார்கள். குழந்தைக்கு மொழி தெரியாது. அந்த நாக்கு அசையும் சத்தத்தில் அது தூங்கிப் போய்விடும். எனவே அதற்கு தாலாட்டு என்று பெயர்.

எப்படி எல்லாம் யசோதை கண்ணனை கொஞ்சி, தாலாட்டி சீராட்டி இருப்பாள்....எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருந்துவதாக குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

தேவகியே கூட இவ்வளவு உருகி இருப்பாளா என்று தெரியாது. ஆழ்வார் அவ்வளவு உருகுகிறார்.

மனம் ஒன்றி வாசித்துப் பாருங்கள்....மனதுக்குள் என்னவோ செய்யும்.


http://interestingtamilpoems.blogspot.in/
 
Hers is one more poem in praise of the kutty yaanaik kaNNan

aka KaaraNa VaaraNan! :)

காரண வாரணன்



அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!

வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!

நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!

கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!

பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி படிய விளையாடுவான்.
பட்டுப்போல் குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும் வாரணம்!

அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின் காரணம்;
அவன் அருள் என்றும் நாம் கோரணும்!

அவன் திவ்ய பரி பூரணன்;
அவனே உயர் திரு நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!

எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான், இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/
 
arv_lord_krishna_2572f.jpg


KAARANA VAARANA KANNAN.


He is the cause of this world;
He is a beautiful VAranam;
He is pretty and dark colored;
So He is a beautiful VAranam.
He has became a kunjaram by eating butter, curd and milk to His heart’s delight.
We can spend hours at a stretch, watching a magnificent elephant.
The magnificent KAranan will steal our hearts and intellect!
All calves are pretty, even that of an elephant. but the only real beautiful person is our Krishnan.
Decorated with silk clothes after having his bath, He will go and play in mud and sand.
When bathed clean, the elephant will shower itself with dirt and mud.
His words form the Aranam;
He is a karpaga VAranam;
He is the srushti KAranam;
His blessings are to be sought;
He is the only pari pooranan;
He is the all powerful NAranan;
He is the root of everything;
He wears a garland of 1000 names;
We may seek and search all over the world,
but we will not find another KArana VArana Krishnan.

 
மிக அருமையான கருத்துக்கள் எளிமையாக படிக்கத்தந்ததற்கு மிக்க நன்றி.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top