• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பிச்சைக்காரன் திருவோட்டில் சனீஸ்வரன் ப&#

Status
Not open for further replies.
பிச்சைக்காரன் திருவோட்டில் சனீஸ்வரன் ப&#

பழய திரைப்படம் ஒன்றில் திரு எம்.ஆர். ராதா அவர்கள் சொல்லுவார்...

" இந்த நாட்டில் பிறந்தால் ஒன்று பணக்காரனாகப் பிறக்க வேண்டும்.... அல்லது
பிச்சைக்காரனாகப் பிறக்கவேண்டும் " என்று..

அதாவது நடுத்தட்டு மக்களாக பிறக்ககூடாது என்பது அதன் அர்த்தம்.

ஏனென்றால் விலைவாசி பற்றி பணக்காரனும் கவலைப்பட மாட்டான்.... பிச்சைக்காரனும் கவலைப்படமாட்டான்...

அந்தக்கூற்றை உண்மையாக்குவது போல்,நேற்றைய நாளிதழ்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ 8/- உயர்த்தினால்தான் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சரிக்கட்ட இயலும் என்ற குண்டை பொதுமக்கள் மீது வீசியிருக்கிறார்.

ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்து இதுவரை 10 தடவைக்குமேல் பெட்ரோல்,டீசல் விலையை உயற்றி விட்டனர்.கிட்டதட்ட இரண்டுமடங்கு விலையை உயற்றிவிட்டனர்.

இவர்கள் ஆட்சியை விட்டு 2014ல் இறங்குவதற்குள் பெட்ரோல் ரூ 100/- கும் டீசல் ரூ 50/- க்கும் மேல் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

சராசரியாக இவ்விரண்டும் உயர்ந்தால் உடனே உடன்பிறப்பு போல் விலைவாசியும் உயர்ந்துவிடும்.

வழக்கம்போல் கலைஞரும்... நல்லவேளை நான்கூட ரூ 10/- உயர்த்துவார்கள் என்று நினைத்தேன்... பரவாயில்லை ரூ 8/- தான் உயர்த்தியுள்ளனர் என்று ஸ்டேட்மென்ட் குடுத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை...

எது எப்படியோ ... செத்தவன் சுமை சுமப்பவன் தலை மேலே என்ற பழமொழிக்கேற்ப்ப இவர்களை ஆட்சியில் அமரவைத்த பாவத்தை இன்னும் எவ்வளவுநாள்தான் இந்திய மக்கள் அனுபவிக்க இருக்கிறார்களோ....
 
Well said sir, but is there any other way out for us sir? Born in middleclass family is our crime? Now a days even going by IIA/C itself is very horrible and we have to book the tickets 4 months in advance, otherwise we are compelled to fly.
 
அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலைப் பற்றித்தான் கவலை...

அன்றாடங்காச்சிக்கோ அடுத்தவேளை சோற்றைப் பற்றித்தான் கவலை....
 
Status
Not open for further replies.
Back
Top