பாரதியின் பேராசை!

Status
Not open for further replies.
பாரதியின் பேராசை!

old-bharathi.jpg


“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!”
--பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!


எல்லோருக்கும் ஆசை உண்டு. அது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே இருக்கும். அது சின்ன ஆசை. நாட்டைப் பற்றியும் மனித குல முன்னேற்றத்தைப் பற்றியும் சதா சர்வ காலமும் அல்லும் பகலும் அனவரதமும் ஆசைப்பட்டால் அதை என்ன என்று அழைக்கலாம்? அது பெரிய ஆசை= ‘பேராசை’ அல்லவா?
படித்துப் பாருங்களேன். நீங்களே சொல்லுவீர்கள்
பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான். குறள் 1062)
பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?

“தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”.

உழைத்து வாழ வேண்டும். லாட்டரி பரிசு மூலமோ அரசாங்க நிதி உதவி மூலமோ பணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.
அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை—உலகில்
இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!
இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.
கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!
வல்லமை தாராயோ, இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி—நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”


இந்த நிலத்துக்குச் சுமையென வாழாமல் பிறருக்கு உதவி செய்து வாழ அருள்புரி என்று இறைவனிடம் மன்றாடுகிறார். அல்லும் பகலும் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தையும் பற்றி சிந்திக்கும் நம்மையும் நம்ம ஊர் அரசியல் தலைவர்களையும் பாரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவனிடம் இருந்து ஊற்றுணர்ச்சி பெற வேண்டும்.

எப்போதும் ‘பாஸிடிவ் திங்க்கிங்’ (Positive Thinking) உடையவன் பாரதி.

மனப் பெண் என்னும் பாடலில் மனதை நோக்கிச் சொல்கிறான்:
“நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன்; முக்தியும் தேடுவேன்
உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட
சிவமெனும் பொருளை தினமும் போற்றி
உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்”
கடந்த கால கஷ்டங்களை எண்ணிக் கவலைப் படுவோருக்கு ஒரு அறிவுரையும் வழங்குகிறான்
“இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பிவாரா”

. . . .. . . . .
‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடத் துவங்கியவன் திடீரென்று
“பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்”
என்று ஆசைப்படுகிறான். பெண்கள் கல்வி கற்றால்தான் முன்னேற முடியும் என்பது அவன் துணிபு.


அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்
குலவிடும் தனிப் பரம் பொருளே!
………………………

என்றும் இன்னொரு பாட்டில்
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லைதரும் அகப் பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே
நல்வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே! என்று பாடுகிறான்.
…………..
வாழிய செந்தமிழ்
வாழிய செந்தமிழ் பாட்டில்………….
“இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக ! என்று வேண்டி
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் ! வாழிய பாரத் மணித்திரு நாடு என்றும் வாழ்த்துகிறான்.
…………………..

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!

………………….
என்றும் இன்னொரு பாட்டில்
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்
வேண்டாதனைத்தையும் நீக்கி
வேண்டியயதனைத்தும் அருள்வது உன் கடனே” என்பான்
…………………

ஒரு கோடி தமிழ் பாட ஆசை
விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுனது அன்னை பராசக்திக்கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவை
தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!
…………………………..

கலியுகத்தைக் கொல்வேன்
பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே (பாரதி) என்பான்.
அவனுக்குள்ள பல ஆசைகளில் ஒன்று வேதத்தை தமிழில் பாடவேண்டும் என்பதாகும்:
“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழ மறையைப் பாடுவோம்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்”

இப்போது எனக்கும் பாட வேண்டும் போல இருக்கிறது:

பேராசைக் காரனடா பாரதி—அவன்
ஏது செய்தும் தமிழை வளர்க்கப் பார்ப்பான்!
பேராசைக் காரனடா பாரதி—அவன்
ஏது செய்தும் மனித குலம் செழிக்க வைப்பான்!
வாழ்க பாரதி, வளர்க தமிழ்! செழிக்க வையகமே!
……………….
 
மீசைக்காரருக்கு ஆசையும் அதிகம் தான்!
ஆசை இன்றி சாதனை ஏது சொல்லுங்கள்!

என்ன வேண்டும் என்றும் தெரிய வேண்டும்.
எப்படி அடைவது என்றும் தெரிய வேண்டும்.

கனவு என்னும் ஆசையை முயன்று வென்று
நனவாக்குவது எளிதாகிவிடும் அல்லவா???

பேராசை தீயது மண், பெண், பொன்னை நாம் நாடினால்.
பேராசை நல்லதே அனைவரின் உயர்ச்சியை நாடினால்!
 
நல்லதொரு கவியாலே நன் பாட்டுப் புலவன் புகழ் பாடியமைக்கு நன்றி நன்றி.
 

பாரதியின் பேராசையைப் பார்த்துத்தான் வைரமுத்து இப்படி ஆசைகளை எழுதினாரோ? :)



சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்


உயிரைக் கிள்ளாத உறவை
க் கேட்டேன்

ற்றைக் கண்ணீர்த் துளியை கேட்டேன்

வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்

வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்


இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

இளமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்


புல்லின் நுனியில் பனியை
க் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கை கேட்டேன்

தானே உறங்கும் விழியை
க் கேட்டேன்

தலையை கோதும் விரலை
க் கேட்டேன்


நிலவில் நனையும் சோலை கேட்டேன்

நீல குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருள
ப் புல்வெளி கேட்டேன்


தொட்டு
ப் படுக்க நிலவை கேட்டேன்

எட்டி
ப் பிடிக்க விண்மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மணக்கும் கனவை
க் கேட்டேன்


பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்

பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்


உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவை
க் கேட்டேன்

வாழும்போதே ஸ்வர்கம் கேட்டேன்


எண்ணம் எல்லாம் உயர
க் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞ்யானம் கேட்டேன்

காமம் கடந்த
யோகம் கேட்டேன்


சு
ற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சந்தலைமேல் மழையை கேட்டேன்

உள்ளங்காலில் நதியை கேட்டேன்


பண்கொண்ட பாடல் பயில
க் கேட்டேன்

பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பை
க் கேட்டேன்

நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்


மலரில் ஒரு நாள் வசிக்க
க் கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்க
க் கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்க
க் கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்க
க் கேட்டேன்


விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழ
க் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்


பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளை
க் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலை
க் கேட்டேன்


பாரதியாரின் சொல்லை
க் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லை
க் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலை
க் கேட்டேன்

மதுரை மீனாக்ஷி கிளியை
க் கேட்டேன்


சொந்த உழைப்பில் சோறை
க் கேட்டேன்

தொட்டுக் கொள்ள
ப் பாசம் கேட்டேன்

மழையை
ப் போன்ற பொறுமையை கேட்டேன்

புல்லை
ப் போன்ற பணிவைக் கேட்டேன்


புயலை
ப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் துணிவை
க் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

த்ரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்


தொலைந்துவிடாத பொறுமையை கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்க
ள் கேட்டேன்


காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்


போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்
ப் பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்


ஆறாம் விரலாய்
ப்
பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்

கூட்டுக் கிளிபோல் வாழ கேட்டேன்

குறைந்தபட்ச அன்பை கேட்டேன்

 
உயர்ந்த கருத்துக்கள், நல்ல சிந்தனை, அவரே பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் என்று கவிதையில் குறிப்பிடுவதால் வைரமுத்து அவர்கள் மேல் பாரதியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.
 
பாரதியின் தாக்கம் உண்டோ இல்லையோ அறியேன்!

பாரதியை விடப் பேராசை நிச்சயம் அதிகம் அறிவேன்! :)

எத்தனை எத்தனை கோரிக்கைகள், எத்தனை ஆசைகள்
இத்தகைய மனிதரிடம் சென்று ஆசை அறுமின் என்றால்...??? :faint:
 
Status
Not open for further replies.
Back
Top