• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாகவதம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

Status
Not open for further replies.
பாகவதம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

Crystal+Krishna.jpg


பாகவதம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!


பகவான் கிருஷ்ணனின் வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் நூல் பாகவதம். ஆனால் கிருஷ்ணனுடன் நிறுத்திக் கொள்ளாமல் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களையும் இது சுவைபடக் கூறும். ஆதிகாலத்தில் பகவத் பெருமையை சங்கீத உபந்யாசமாகச் செய்தவர்களை மட்டுமே பாகவதர் என்று அழைத்தார்கள். இப்போது உபந்யாசம் போய்விட்டது. வெறும் சங்கீதம் மட்டும் இசைப்பவர்களையே பாகவதர் என்று சொல்லிவிட்டோம். காலம் மாற மாற சொற்களின் பொருளும் மாறிவிடுகிறது.


பாகவதங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். ராமாயணத்தில் 300 வகைகள் இருக்கின்றன என்று முன்னமேயே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டேன். இதே போல பாகவதத்திலும் பலவகைகள் உண்டு. சிலவற்றில் கூடுதல் அவதாரங்கள் பேசப்படுகின்றன. பெரும்பாலோருக்குத் தெரிந்த கீதை பகவத் கீதை. இது மஹா பாரதத்தில் உள்ளது. மஹா பரதத்திலேயே வேறு பல கீதைகளும் உண்டு.


பாகவதத்திலும் பலவேறு கீதைகள் உள்ளன. இது புத்தகத்துக்கு புத்தகம் மாறுபடும்.. ஆயினும் எல்லா கீதைகளிலும் புகழ்பெற்றது பகவத் கீதை, இதற்கு அடுத்தாற்போல மிகவும் புகழ்பெற்றது உத்தவ கீதை. இது பாகவத்தின் 11ஆவது அத்தியாயமாக வருகிறது. பாகவத சப்தாஹம் என்று ஏழே நாட்களில் பாகவதத்தைப் பாராயணம் செய்யும் மரபு உண்டு. அதில் உத்தவ கீதை சொல்லும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும்.


லண்டனிலுள்ள எனது நண்பர் வருடந்தோறும் குருவாயூருக்குச் சென்று பாகவத சப்தாஹம் நடத்துகிறார். பாராயணம் செய்யும் பக்தர்கள், அதைக் கேட்க வரும் பக்தர்கள் ஆகியோருக்குச் சாப்பாடு போட லட்சககணக்கில் தனது சொந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்.அவ்வளவு பெருமையும் புண்ணியமும் பாகவதத்துக்கு உண்டு


வியாசரின் மகனான சுக முனிவர் சொன்னது பாகவதம். இதைக் கேட்டவன் பரீக்ஷித் மன்னன். இதில் 18,000 ஸ்லோகங்கள் உண்டு. 18 புராணங்களில் மிகவும் பிரபலமானது பாகவத புராணமே.


இதிஹாச பாகவதம், புராண பாகவதம், சம்மிதா பாகவதம், உபசம்மீதா பாகவதம், விஷ்ணுரகசிய பாகவதம், விஷ்ணுயாமள பாகவதம், கௌதம சம்மிதா பாகவதம் என வட மொழியில் பல பாகவதங்களும் அவைகளில் 15 வகையான கீதைகளும் இருக்கின்றன.

dancing+krishna.jpg



தமிழில் பாகவதம்

செவ்வைச் சூடுவார் மற்றும் அருளாளதாசர் ஆகிய இருவரும் தமிழில் பாகவதத்தைப் பாடியுள்ளனர். தமிழில் புராண இலக்கியம் மிக மிகப் பெரியது. பல்லாயிரக்கணக்கான படல்களைக் கொண்டது. இவைகளில் ஸ்காந்தம் எனப்படும் கந்தபுராணம் ஒன்றே இன்று படிக்கப்படுகிறது. மற்றவை எல்லாம் நூலகத்தில் பழுப்படைந்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட வேம்பத்தூரைச் சேர்ந்த மாதவனின் மற்றொரு பெயர் செவ்வைச்சூடுவார். அவரது இதிஹாச பாகவதத்தில் 4970 பாடல்கள் உள்ளன. பத்தாவது அத்தியாயம் கண்ணனின் கதையைக் கூறும். 11ஆவது அத்தியாயம் உத்தவ கீதையைக் கூறும். இரண்டும் முக்கியமானவை.


இவருக்கு அடுத்துவந்த அருளாளதாசரின் இயற்பெயர் வரதராஜ அய்யங்கார். இவர்தான் 18 புராணங்களில் ஒன்றான பாகவதத்தை 9167 பாடல்களில் மொழி பெயர்த்தார். இது முன்னதை விட நீண்டதாயினும் செவ்வைசூடுவாரின் பாகவதமே மொழி நடையில் சிறந்தது என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து. தமிழ் மொழி தெய்வத் தமிழ் ஆகும். ஆயினும் அவைகளில் உள்ள பல்லாயிரக் கணக்கான பாடல்களை படிக்கும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள். பலகலைக்கழக பட்டங்களுக்கும் ஆராய்ச்சிக்கும் படிக்கும் மாணவர்கள் மட்டுமே ஆழமாகப்படிக்கிறார்கள் (பட்டங்களுக்காக). ஏனையோர் இதைக் கண்டுகொள்ளாதது வருத்தம் தரும் விடயமாகும்.
Pictures are taken from Face book, thanks.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top