• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பழந்தமிழரின் அளவை முறைகள்

Status
Not open for further replies.

Brahmanyan

Active member
பழந்தமிழரின் அளவை முறைகள்

Dr.M.K.Muruganandan பழந்தமிழரின் அளவை முறைகள் என்ற தலைப்பின் கீழ் பண்டைய அளவு முறைகளின் விவரங்களை தனது Blog site ல் பதிவு செய்திருக்கிறார் .மிகவும் சுவாரஸ்யமான விஷயம் படித்தால் தெரியும்.


பழந்தமிழரின் அளவை முறைகள்

Sithi Samira Begam அவர்கள் தனது முகப் புத்தகத்தில் பதிந்த பதிவு.
முக்கியத்துவம் கருதி இங்கு பகிர்கிறேன். எனது மனமர்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும்
நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின்
பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம்
இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய
அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும்
இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்…

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

அறுபது விநாடி = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை… எனவே
இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…
 
வட மொழியில் எண்கள் கூட்டுத்தொகையை பல்வேறு பெயரிட்டு இருக்கின்றனர், வேறு ஏதாவது மொழியில் இது போல இருந்தால் சொல்லுங்கள்
( நன்றி சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை)

1. ௧௦ தசம்-பத்து
2. ௧௦௦ சதம் – நூறு
3. ௧௦௦௦ சகத்திரம் – ஆயிரம்
4. ௧௦௦௦௦ ஆயுதம் – பதினாயிரம்
5. ௧௦௦௦௦௦ நியுதம் – இலட்சம் ,நூறாயிரம்
6. ௧௦௦௦௦௦௦ பிரயுதம் – பத்துலட்சம்
7. ௧௦௦௦௦௦௦௦ கோடி – நூறு லட்சம்
8. ௧௦௦௦௦௦௦௦௦ தசகோடி – பத்துகோடி
9. ௧௦௦௦௦௦௦௦௦௦ சதகோடி – நூறு கோடி
10. ௧௦௦௦௦௦௦௦௦௦௦ அற்புதம் – ஆயிரங்கோடி
11. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦ நிகர்ப்புதம் – பதினாயிரகோடி
12. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கர்வம் – இலட்சம்கோடி
13. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகர்வம் – பத்துலட்சம் கோடி
14. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பதுமம் – கோடாகோடி
15. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாபதுமம் – பத்துக்கோடாகோடி
16. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சங்கம் – நூறுகோடாகோடி
17. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦மகாசங்கம் – ஆயிரம்கோடாகோடி
18. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கோணி – பதினாயிரங்கோடாகோடி
19. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகோணி – இலட்சம்கோடாகோடி
20. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கிதி – பத்துலட்சம்கோடாகோடி
21. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகிதி – கோடி கோடாகோடி
22. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சோபம் – பத்துகோடி கோடாகோடி
23. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாசோபம் – நூறு கோடி கோடாகோடி
24. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பரார்த்தம் – ஆயிரங்கோடி கோடாகோடி
25. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சாகரம் – பதினாயிரங்கோடி கோடாகோடி
26. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பரதம் – லட்சம்கோடி கோடாகோடி
27. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அசந்தியம் – பத்துலட்சம்கோடி கோடாகோடி
28. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அத்தியந்தம் – கோடி கோடி கோடாகோடி
29. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அனந்தம் – பத்துகோடி கோடி கோடாகோடி
30. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பூரி – நூறு கோடி கோடி கோடாகோடி
31. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாபூரி – ஆயிரங்கோடி கோடி கோடாகோடி
32. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அப்பிரமேயம் – பதினாயிரகோடி கோடி கோடாகோடி
33. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அதுலம் – இலட்சம்கோடி கோடி கோடாகோடி
34. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அகம்மியம் – பத்துலட்சம் கோடி கோடி கோடாகோடி
35. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அவ்வியத்தம் – கோடாகோடி கோடி கோடாகோடி.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top