பல்மொழிகள்

Status
Not open for further replies.
1. பிறக்கும்போதும் இருப்பதில்லை இறக்கும்போதும் இருப்பதில்லை
பல்

2. பல் வலிமையானது; நாக்கு மென்மையானது. ஆனால் பயம் வந்தால்
முதலில் நடுங்குவது பல்

3. பகைவன் வந்தால் பயப்படாதவனும் பல்வலி வந்தால் பயப்படுவான்

4. எத்தனை முயன்றாலும் வெளுப்படையாது பாழான மனதும்
பழுப்பேறிய பல்லும்

5 .நாக்கு உதிர்த்த சொல்லும் வாய் உதிர்த்த பல்லும் மீண்டும் இடம்
சேராது.

6. நாக்குக்கு பல்லே அணை

7. நீ என்ன பிடுங்கினாய் என்று கேட்க முடியாது பல் டாக்டரை

8. சூடோ, குளிர்ச்சியோ நாக்கு தாங்கும் அளவுக்கு பல் தாங்காது

9. பல்
கொஞ்சம் காட்டினால் புன்னகை
இன்னும் கொஞ்சம் நீட்டினால் இளிப்பு
முழுவதும் காட்டினால்தான் சிரிப்பு

10. பல் இருந்தும் சிரிக்கத் தெரியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்

கொசுறு: பல் ஆண்டு வாழ்க என்றால் உறுதியான பற்களுடன் நீண்ட நாட்கள் வாழ்க என்றும்பொருள் கொள்ளலாம்.
 
Status
Not open for further replies.
Back
Top