• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பலகோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Status
Not open for further replies.
பலகோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

மணப்புரம் நிறுவனத்தில் ஊழியர்களை அடைத்து வைத்து பலகோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை (படங்கள்)

(25/09/2015)

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மணப்புரம் தங்க நகைக்கடன் நிறுவனத்தில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, ரூ.17 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் வேடிக்கை என்னவென்றால் கொள்ளை சம்பவம் நடக்கும் போது ரோந்து போலீஸாரும் அந்தப்பகுதியில் இருந்துள்ளனர்.



Thief%20vathlagundu.jpg


வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள காம்பளக்ஸில் மணப்புரம் தங்க நகைக்கடன் நிறுவனம் மாடியில் செயல்படுகிறது. வழக்கம் போல நேற்று பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

காலை 9 மணி அளவில் 6 மர்மநபர்கள் முகமூடி அணிந்து கத்தியுடன் அங்கு நுழைந்தனர். அதை தடுத்த காவலாளியை முகமுடி கொள்ளையர்கள் உள்ளே இழுத்துச் சென்று கத்தி முனையில் நிறுத்தினர். இதைப்பார்த்த ஊழியர்கள் சத்தம் போட்டனர். அவர்களையும் மிரட்டி ஒரு அறையில் அடைத்தனர். பிறகு அவர்களது வாயில் பிளாஸ்டிக் டேப் கொண்டு ஒட்டினர். கை, கால்களையும் கயிறால் கட்டினர். சினிமாவில் வரும் காட்சி போல இவை நிகழ்ந்தன.

அடுத்து மேலாளர் சுகன்யாவிடம் லாக்கர் சாவியை வாங்கி அங்கு சென்றனர். அங்கு இரண்டு பீரோக்கள் இருந்துள்ளன. அதில் ஒரு சாவி மட்டும் சுகன்யாவிடம் இருந்தது. மற்றொரு பீரோவின் சாவி கோவையில் உள்ள வங்கியில் இருந்துள்ளது. இதனால் அந்த பீரோவை கொள்ளையர்களால் திறக்க முடியவில்லை. சுகன்யாவிடமிருந்து பெற்ற சாவி மூலம் ஒரு பீரோவை திறந்து அதிலிருந்த நகைகள், பணத்தை அள்ளினர். பிறகு கொள்ளையடித்த நகை, பணத்தை பைகளில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர். இந்த சமயத்தில் இன்னொரு ஊழியர் அங்கு வந்துள்ளார். வங்கியில் யாரும் இல்லாததால் ஊழியர்களை தேடினார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஊழியர்களை அவர் மீட்டுள்ளனர். இதன்பிறகு அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



Thief%20vathlagundu%201.jpg



கொள்ளை நடந்த சமயத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி, அந்தப்பகுதியில் ரோந்து பணிக்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கண்களிலும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

தகவல் அறிந்த டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம், எஸ்.பி. சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் சாமி கோயில் தெருவில் போய் நின்றது. கொள்ளை சம்பவத்தையொட்டி, அப்பகுதியில் உடனடியாக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாகக் கூறப்படுகிறது.


Thief%20vathlagundu%202.jpg



இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கொள்ளைபோன நகைகள் விவரம் இன்னமும் ஊழியர்களுக்கே தெரியவில்லை. ரூ.17 லட்சம் பணம் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரு பீரோக்களில் ஒரு பீரோவின் சாவி கோவை நிறுவனத்தில் இருந்ததால் அதிலிருந்த இருந்த நகை, பணம் தப்பியது.


கொள்ளையடிக்கும் போது அவர்கள் சைகை மூலமாகவே பேசி இருக்கிறார்கள். கண்காணிப்பு கேமிராவில் தங்களது முகம் தெரியாமலிருக்க அதையும் உடைக்க முயற்சித்துள்ளனர். லாக்கரின் அலாரத்தையும் நிறுத்தி உள்ளனர். விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

http://www.vikatan.com/news/article.php?aid=52873
 
That day is not far off when a technology solution will direct authorities to quick arrest. CCTVs are not that effective as the thieves either cover their face or have beards (false or real). A chemical spray which will incapacitate or leave a marker on their person and clothes. Swiss had developed a long lasting (upto a month) luminescent chemical sprayed on the thieves without their knowledge enabling the authorities to chase them at a relaxed pace.
 
Status
Not open for further replies.
Back
Top