• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பறவை காட்டும் பரம்பொருள்

உபய வேதாந்தங்களில் கரை கண்டவரும், எம்பெருமானார் சிந்தாந்த நித்தாரக சார்வ பௌமரான ஸ்ரீ தொட்டாயாசாரியார் என்னும் ஆச்சார்யர், திருக்கடிகை என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருந்தார். அவர் வருடம் தவறாமல் காஞ்சி வரதனின் வைகாசி உற்சவத்திற்கு எழுந்தருளியிருந்து கைங்கர்யம் செய்வது வழக்கம்.

வயோதிகத்தால் ஒரு வருடம் ஸ்வாமியால் வைகாசி உற்சவத்திற்கு எழுந்தருள முடியவில்லை. வையம் கண்ட வரதனின் கருடசேவையாவது சேவிக்க எண்ணி ஸ்வாமி காஞ்சியை நோக்கி பயணிக்க தீர்மானித்தார்.

இரவு நேரமும் வந்தது, ஸ்வாமி தக்கான் குளக்கரைக்கு வந்து சேர்ந்தார். அன்று இரவை அங்கேயே கழித்தார். மறுநாள் காலையில் ஸ்வாமி தக்கான் குளத்தில் அனுஷ்டாங்களை முடித்து, வரதனின் கருடசேவையை சேவிக்க முடியவில்லையே என்று மனம் வெழும்பினார்.

அத்தியூரான் புள்ளையூர்வான் என்கிற பூதத்தாழ்வாரின் பாசுரத்தை அனுஷ்ட்டித்தார் ஸ்வாமி. அந்த சமயத்தில், பொலிந்து இருந்த கார்வானில் மின்னல் போல், கச்சி நகரில் சேவை சாதிப்பது போல ஸ்வாமிக்கு சேவை சாத்தித்தான் காட்சியளித்தான் வரதன்.

தமக்கு வரதன் சேவை சாத்தித்தை ஸ்வாமி, தேவராஜ பஞ்சகம் என்கிற ஐந்து ஸ்லோகத்தால் அருளிச்செய்தார் ஸ்வாமி.

அதில், பெரிய திருவடியான கருடன் பேரருளாளனுடைய திருவடி தாமரைகளை தன் கைத்தலத்திலே ஏந்தி வருவதை இரு ஸ்லோகத்தால் பெருமை கூறுகின்றார் ஸ்வாமி.

உலகில் வேதம் கூறும் பரம்பொருள் யார் என்கிற விசாரம் பல நாட்களாக நடந்து வருகிறது. சாஸ்த்திரம் அறிந்தவர்கள் சிலர் ருத்ரனையே பரம்பொருள் என்று சொல்லுகிறார்கள், சிலரோ நான்முகனே பரம்பொருள் என்று சொல்லுகிறார்கள்.

மறந்தும் புறம் தொழுதா மாந்தர்களான ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களோ " வேதம் ஸ்ரீமந் நாராயணனே மேம்பொருள் என்று சொல்லுகிறது. அவன் தான் சரணமடைய தகுதியானவன் என்றும், அவனைத் தவிர வேறெவரும் நாம் புகலில்லை எனவும் காட்டுகிறது என்று பலவிதமாக நிரூபித்துள்ளார்கள் நமது ஆச்சார்யர்கள்." (தற்சமயம் கேட்டால் மனைவியே பரதத்வம் என்று கூறுவார்கள்)

இப்படி இருக்க சாமான்ய மனிதர்களான நமக்கோ, பரம்பொருள் யார் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழுப்பத்தை போக்குவதற்கு, தெளிவு பிறக்க வேண்டி பெரிய திருவடியான கருடன் தம்முடைய கைத்தலத்திலே எம்பெருமான் திருவடி தாமரைகளை பரதத்துவமாக காட்டுகின்றார்.

ஒரு பறவை காட்டுகின்றது பரம்பொருள் ஆகுமோ ? ஆகும் என்கிறார்கள் நமது ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர்கள்.

கருடனை "வேதாத்மா" என்று பெருமை கூறுகின்றனர் நமது ஆச்சார்யர்கள். அந்த பெரிய திருவடி என்ன செய்கிறார் என்றால் அவர் தன மீது எழுந்தருளியுள்ள எம்பெருமானின் திருவடித் தாமரைகளை தனது திருக்கரங்களால் நமக்கு காட்டிக் கொடுக்கிறார்.

ஆக வேதம் தான் பெரிய திருவடி, அவர் திருத்தோள்களிலே எழுந்தருளியுள்ள எம்பெருமானே எல்லாத் தேவர்களையும் விட மேலானவன். அவன் திருவடிகளே நமக்கு தஞ்சம் என்பதைத் தான் நமக்கு காட்டுகிறார்.

எந்த எம்பெருமானுடைய திருவடி தாமரைகளை வேதாந்தங்கள் பெருமை கூறுகின்றனவோ, எந்த எம்பெருமானின் திருவடியானது பிரமன், சிவன், இந்திரன் ஆகியவர்களால் முடி தாழ்த்தி வணங்க கூடியதோ, அப்படிப்பட்ட திருவடிகள் நாம் சரணமடைய தகுந்தது என்பதை பெரிய திருவடியான கருடன் கையிலேந்தி காட்டுகின்றார்.

கேசித் தத்வவிசோதநே பசுபதெள பாராம்யமாஹு: பரே

வ்யாஜஹ்ரு: கமலாஸநே நயவிதாம் அந்யே ஹரௌ ஸாதரம்,

இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே:

தத்வம் தர்சயதீவ ஸம்ப்ரதி ந்ருணாம் தார்க்ஷ்ய: ச்ருதீநாம் நிதி:

( ஸ்ரீ தேவராஜ பஞ்சகம் - 3)

யத் வேதமௌலிகண வேத்யமவேத்யமவேத்யமந்யை:

யத் ப்ரஹ்மருத்ர ஸுரநாயக மௌலிவந்த்யம்,

தத் பத்மநாபபதபத்மமிதம் மநுக்ஷ்யை:

ஸேவ்யம் பவத்பிரிதி தர்சயதீவ தார்க்ஷ்ய:

( ஸ்ரீ தேவராஜ பஞ்சகம் - 4)

இன்று ஸ்வாமியின் திருநக்ஷத்திரம் - (மாசி உத்திராடம் 02- 03 - 2019 )

பிள்ளைலோகம் இராமாநுசன்.

7145
 
ஆயிரம் இதழ் தாமரைகள் தனை காண்பிப்பது ஓர் பறவை. மற்றொறு பறவைதனை நான்முகனும் மறந்தான் அன்று!
 
பறவையும் அப்பறவையே, தாமரையும் அப்பறவையே! பறக்குமோ அப்பறவை?
 

Latest ads

Back
Top