பருப்பு உருண்டை குழம்பு

Status
Not open for further replies.
பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு

sl2759.jpg




என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 150 கிராம்
தேங்காய் - 1/4 மூடி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
இஞ்சி விழுது - 1
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 4
கிராம்பு - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்து மல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?


கடலைப்பருப்பில் பாதி பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும், மீதி பருப்பை வேக வைத்துக்கொள்ளவும்.

ஊற வைத்த கடலைப்பருப்பை வடைக்கு அரைப்பது போல் அரைத்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது 1/4 ஸ்பூன், பூண்டு விழுது 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, அனைத்தையும் போட்டு சிறு உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு அவை வெடித்ததும், வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது போட்டு, வாசனை போகும் வரை வதக்கவும்.

இதில் மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக மசித்து இதில் சேர்க்கவும். பிறகு தேங்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும்.

பிறகு நன்கு கொதித்ததும், ஆவியில் வேக வைத்த உருண்டையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கிவைக்கும் போது, கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.


Source:
Lentil soup dumpling|??????? ??????? ???????- Dinakaran Samayal Corner
 
Status
Not open for further replies.
Back
Top