• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 33

குடலைப் புரட்டிடும் நாற்றமும், காட்சியும், என்னை,
உடனே வெளியேறக் கட்டளையிட்டன! பச்சையும்,

நீலமும் கலந்த நிறத்தில், ஏதோ திரவம், ஒரு பெரிய
அளவுப் பீங்கான் சட்டி ஒன்றில்; அதன் மேலே ஸீட்!

ஏற்கனவே உப
யோகித்த மனித, மனிதிக் கழிவுகள்;
ஏறெடுத்துப் பார்த்தாலே, உண்ட உணவு வாந்திதான்!

மறு நொடியில் வெளியேறி, கதவை மூடி, தாளிட்டு,
இருக்கையில் அமர்ந்து சாய்ந்தேன், விழிகளை மூடி!

சுட்டிப் பெண்களின் சேட்டைகளை நினைத்து, இந்தக்
கெட்ட காட்சிகளை உடனே மறந்திட முயற்சித்தேன்!

சின்னத் தூக்கம் தொடர்ந்தது; கண் விழித்த பொழுது,
இன்னும் சில நொடிகளில் பாஸ்டன், என அறிந்தேன்!

வாச நாப்கினால் (உபயம் - B A பயணம்) துடைத்து, என்
வதனத்தை ஃப்ரெஷ் ஆக்க, காம்பாக்ட் பௌடர் இட்டு,

ஸௌத் ஸ்டேஷனில் இறங்கி, மெட்ரோ ரயிலில் ஏறி,
ஸெல் ஃபோனில் மகனை அழைத்து, விவரம் சொல்லி,

நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை, சின்ன 'ஆ - அம்'
நான் வேண்டுவதால், ஒரு சிறு Doughnut - டை வாங்கி,

அவன் இல்லத்தின் அருகிலுள்ள Alewife நிறுத்தத்தில்,
அவன் வருவதற்குள் உண்டு, பசியாறி, தெம்பானேன்!

தொடரும் ..........................

 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 34

கைப்பேசி இருந்தால், வாழ்வு மிக எளிதாகும்! தனது
கைப்பேசியில், தான் வந்துவிட்டதாக மகன் உரைக்க,

எங்கள் எதிர்ப் புறம், அவன் காரிலிருந்து இறங்குவதை
நாங்கள் பார்க்க, நிமிடங்களிலே இனிய இல்லத்தில்!

குழந்தைகள் இருவரும், எங்கள் வரவால் மகிழ்ந்தனர்;
குதூகலத்துடன், விளையாட எங்களை அ
ழைத்தனர்.

பலூன் ஒன்றைப் பந்தாக பாவித்து, வாலிபால் போல
'பலூன் கேம்' மூன்று விளையாடி, அயர்ந்து போனோம்!

எங்கள் புதிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம்,
எங்கள் இரவு உணவை உண்ணும் வேளையில். பின்பு,

அன்புடன் தங்கை, தன் Beach House - க்கு அழைத்ததை
அன்பு மகனிடம் கூற, ஏற்பாடு செய்கிறேன் என்றான்.

இருவர் பெயரையும், பாஸ்போர்ட்டில் உள்ளது போல,
பொறுமையாய்ப் பூர்த்தி செய்திட, டிக்கட்கள் கிட்டின!

ஸௌத் கேரலினாவில், மெர்டில் பீச்சில் இருக்கிறது,
சௌகரியமாக மூன்று குடும்பங்கள் தங்கிட, தனி வீடு.

அந்தப் பயணத்திற்கு முன், பால விஹார் குழந்தைகள்
சேர்ந்து அளிக்கும், ஒரு பல் சுவை நிகழ்ச்சி இருக்கிறது.

ராமாயணக் காட்சி ஒன்றில், எம் செல்லக் குட்டிதான்,
ராணி சுமித்திரைபோல வேடம் தரித்து வந்திடுவாள்!

தொடரும் ..............................
 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 35

ஆச்சரியங்கள் பல காத்திருந்தன, அந்த நிகழ்ச்சிக்கு
ஆர்வத்துடன் நாங்கள் சென்ற அந்த மாலை வேளை!

மூன்று வயதுக் குழந்தைகள் முதல், அரிதாரத்துடன்,
தான் மேடையேறும் நேரத்தை எதிர்பார்த்து இருக்க,

பட்டுச் சேலைகளும், சிறந்த சுடிதார்களும் அணிந்து,
பட்டாம்பூச்சி போல, மங்கையர் உலவியபடி இருக்க,

கூடியிருந்த ஜனங்களை வரவேற்றான், ஒரு சிறுவன்,
கூழாங்கல்லை வாயிலிட்டுப் பேசும் ஆங்கிலத்தில்!

'அமெழிக்க' ஆங்கிலத்திலே விளாசித் தள்ளினான்,
அமெரிக்காவிலே ஜனித்து, வளர்ந்தவன் என்பதால்!

செல்லக் குட்டி, பள பள உடையில், சுமித்திரையாக;
என்னவருடன் நான் காத்திருந்தேன், காட்சி பார்க்க!

ராணிகளிடம், தசரதன், மகன் இல்லாததால் வருந்த,
ராணிகள் அவனைச் சமாதானம் செய்ய, அதன் பின்பு

யாகம் நடக்க, பாயசம் கிடைக்க, ராணிகளும் அருந்த,
யாவரும் மகிழ,
ராமன் சகோதரர்களுடன் அவதாரம்!

ஒரே மைக்கை எல்லோரும் பகிர்ந்து கொள்ளணும்;
ஒரே குறையாக இது ஒன்றே தோன்றியது, எனக்கு!

தொடர்ந்த நிகழ்ச்சிகளிலே, பல் வேறு திறமைகளை,
தொடர்ந்து காண்பித்து அசத்தினர், சிறுவர் சிறுமியர்!

தொடரும் ............................. :drama:

 

tbs

Well-known member
hi

we had balavihar final day in our local temple too....annual day.....starting with american national anthem with indian national

anthem....very nice to hear from small kids born in USA...
 

shansnrmp

Active member
ஆம் நீண்டகாலத்திற்குப்பின் சந்திப்பு ! இடையில் சில புகைப்படங்கள் அனுப்பியதாக நினைக்கிறன்! :rolleyes:
 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 36

பத்து அம்மாக்கள், தன் குழந்தையை ஜோடி சேர்த்து,
பத்து வேறு மொழிகளில், ஒவ்வொருவராய்ப் பாடினர்!

பதின்பருவப் பெண்கள் நால்வர், புது விதமாக, அந்தர்
பல்டியையும் இணைத்த ஒரு நடனத்தால் அசத்தினர்!

ஆறு வயதுச் சிறுவன், ஹனுமான் சாலீஸா முழுதும்,
அருமையாகப் பாடி, நீண்ட கரகோஷமும் பெற்றான்!

தன் இந்தியப் பயணத்தை, சின்னத் திரைப்படம்போல
தந்து, நெஞ்சம் மகிழ வைத்தான் இன்னொரு சிறுவன்.

இரண்டு வயதைச் சில மாதங்களுக்கு முன் தாண்டிய
வாண்டு, மேடையில் அழைக்காமலே ஏறி, நடனமாட,

குழுமியிருந்த அனைவரும் கை தட்ட ஆரம்பிக்க, அக்
குழந்தை, தன் பிஞ்சுக் கைகளை ஆட்டியது, நன்றி கூற!

Potluck விருந்து ஆரம்பித்தது, நிகழ்ச்சிகள் முடிந்த பின்.
பெற்றோர் ஒவ்வொருவரும், ஒரு விதப் பதார்த்தத்தை,

வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு வருவார்; அவற்றை
விருந்தினர் அனைவரும், கூடி உண்பதே Potluck விருந்து.

பல் சுவை நிகழ்ச்சி, கண்களை, செவிகளை நிறைத்திட,
பல் சுவை விருந்தால், வயிறும் குளிர்ந்தது நிஜம்தான்!

இந்த இனிய மாலை நேரத்திற்குப் பின், சில நாட்களில்,
வந்தது, எங்களது மெர்டில் பீச் பயணத்தின் அதி காலை!

தொடரும் .......................... :plane:

குறிப்பு: 'பதின்பருவம்' - இது அழகிய தமிழ்ச் சொல். :love:
இனி, 'டீன் ஏஜ்' என்று எழுதத் தேவையில்லை!! :peace:
 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 37

அதிகச் செலவு இல்லாத விமானப் பயணம் என்றால்,
அதிகாலை நேரத்திலே பயணம் செய்திட வேண்டும்!

மூன்று மணிக்கு எழுந்து, சூடான காஃபி அருந்தி, நீராடி,
அன்று மகனுடன் புறப்பட்டோம் விமான நிலயத்திற்கு.

சப்பாத்தி ரோல்கள் செய்து, பெண்ணரசி தந்திருந்தாள்.
இப்போது விமானங்களில் ஓஸி சாப்பாடு கிடையாதே!

நான்கு மணிக்கே விமான நிலையம் நிரம்பி வழிந்தது;
நாங்களும், இருந்த ஒரே க்யூவிலே சங்கமம் ஆனோம்!

ஜனங்கள் மெல்ல நகர்ந்து செல்ல, சில நிமிடங்களிலே
நாங்கள் அடைந்தோம், அங்கிருந்த செக்கிங் கவுன்டரை!

இரு டிக்கட்களையும், இரு பாஸ்போர்ட்களையும் - அங்கு
இருந்த பச்சைக்கண் அதிகாரியிடம் என்னவர் கொடுக்க,

இந்தியப் பெயர்களில் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாது,
சிந்தித்துச் செயலாற்ற, எழுத்துக் கூட்டிப் படித்த பின்னர்,

''உங்களால் பயணம் செய்ய முடியாது! வருந்துகின்றேன்!
உங்களது பெயர், டிக்கட், பாஸ்போர்ட்களில், வெவ்வேறு!

இந்த 'ரஜே'யின் இரண்டாம் பெயர் 'கோபால்' என்பதற்கு
எந்த ஆவணமேனும் இருக்கிறதா?'', என்று அவர் வினவ,

ராம் தானே ரஜேக்கு கணவர்? இது என்ன குழப்பம் - என,
ராம் ஆகிய என்னவருடன், ரஜேயாகிய நான் பயந்தேன்!!

:fear:

தொடரும் ........................
 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 38

அட்ரினலின் சுரப்பி தனது வேலையை ஆரம்பிக்க,
சட்டென இதயத் துடிப்பு அதிகரிக்க, கண்கள் விரிய,

மனக் கோட்டையாய்க் கட்டியிருந்த பீச் வீடு ஆசை,
கண நேரத்தில் பொடிப் பொடியாகி, கீழே விழுந்திட,

அதிர்ந்து நான் செயலற்று நின்ற பொழுது, என்னவர்
அதிகாரி எதை ஆராய்கின்றார் என்று நோக்கி, அவர்

என் டிக்கட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தவாறு இருப்பது,
என்னவரின் பாஸ்போர்ட் என்று துப்பறிந்தார்! அட!

இந்தியப் பெயரின் எழுத்துக்களை அறிய இயலாது;
இந்திய ஆண், பெண் முக வேறுபாடும் தெரியாதோ?

என்னவரின் இரண்டாம் பெயரை எளிதாகப் படித்து,
என்னுடைய டிக்கட்டில் அதைத் தேடுகிறார், அவர்!

அந்தப் பச்சைக் கண்ணுக்கு நன்றாக விளங்கும்படி,
'இந்த டிக்கட் என் மனைவியுடையது; இது அவளது

பாஸ்போர்ட்', என உரைத்து, மெதுவாக என்னுடைய
பாஸ்போர்ட்டை, டிக்கட்டின் மேல் எடுத்து வைக்க,

ஒவ்வொரு எழுத்தாகப் பச்சைக் கண்களால் பார்த்து,
ஒருவாறு சமாதானம் ஆகி, 'நீங்கள் போகலாம்!', என

எல்லா ஆவணங்களையும் எங்களிடம் தள்ளியதும்,
எல்லாம் வல்ல சக்தி கணபதிக்கு நன்றி கூறினேன்!

தொடரும் ............................... :plane:

 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 39

ஹிட்ச்காக் படம் பார்த்து வெளியில் வரும் சமயம்,
இருப்பது போன்ற மன நிலை; ஆனாலும் சந்தோஷம்!

பெரிய பெட்டிகள் என்றுமே பிடிக்காத விஷயம்; எமது
சிறிய பைகளை மேலே வைத்து, இருக்கையில் அமர,

சில நிமிடங்களிலேயே விமானம் மேலே எழும்பியது.
சின்ன மேகங்களைக் கடந்து, நீல நிற வானை எட்டியது!

இரு மணி நேரப் பயணம். சிக்கென்று உடையில், மங்கை,
ஒரு குட்டித் தண்ணீர் பாட்டிலும், உப்பு தூக்கலாக உள்ள

Pretzel பாக்கெட்டும், இன் முகத்துடன் தந்தாள்! அதனைப்
பிரியத்துடன் உண்ணுவது எனக்குக் கடினமான விஷயம்!

பெண்ணரசி தந்த காலை உணவால் பசியாறினோம்; பின்,
என்னவரின் தங்கையை எதிர்பார்த்தோம், ஏர் போர்ட்டில்.

செல்ல மகன் தந்திருந்தான் ஓர் அலை பேசி; அதுதானே
செல்லும் இடமெல்லாம், தொடர்புக்கு உதவுகிற சாதனம்!

தன் கணவருடன் தங்கை வந்தாள்; அழைத்துச் சென்றாள்
தன் அழகிய பீச் இல்லத்திற்கு; வாசலில் நான் கண்டேன்

வெள்ளை நிற Golf Cart; வாடகைக்குக் கிடைக்குமாம்; அது
வெளியில் செல்லும் குட்டிப் பயணத்திற்கு உபயோகிக்க!

'மன்னி! நீங்களும் ஈஸியாக ஓட்டலாம்!', என்று உரைத்து,
வண்டி ஓட்ட விழையும் எனது ஆசையைத் தூண்டினாள்!

தொடரும் .....................
 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 40

மரப் பலகைகளைச் செங்குத்தாக வைத்து அமைத்த
மதில் சுவர்; ஒரு ஹால்; மூன்று நல்ல பெட் ரூம்கள்.

அவை ஒவ்வொன்றோடு இணைந்த குளியல் அறை.
சமைக்க வசதியாகச் சமையல் அறை; டிஷ் வாஷர்!

சாப்பாட்டு மேஜையைச் சுற்றி அமர, நாற்காலிகள்.
சாய்ந்து படுத்துக்கொள்ள, தோட்டத்தில் hammock!

விடுமுறை நாட்களில், குட்டி சுவர்க்கம்தான் அது!
சடுதியில் நீராடி, சிற்றுண்டி உண்டு புறப்பட்டோம்.

என்னவரின் பெரியம்மாவின் மகன், மனைவியுடன்
அன்று வந்திருக்க, நாங்கள் அறுவர் ஆகிவிட்டோம்!

சிற்பத் தோட்டம் அங்கு சிறப்பு வாய்ந்ததெனக் கூற,
அற்புதமான அதைக் காண அறுவரும் விழைந்தோம்!

மிகப் பெரிய தோட்டம்: பல்வேறு சிற்பங்கள் அருமை;
மிகவும் நல்ல பராமரிப்பு; மரங்களின் நிழல் குளுமை!

மிருகங்களும், அவற்றின் சில சண்டைக் காட்சிகளும்,
பறவைகளும், புராண கால மக்களும், உலோகத்திலும்,

கல்லிலும் மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்க,
வெண் சிற்பமான சாம்ஸனும், சிங்கமும் மயக்கியது!

வட்ட வடிவில் நீரூற்றும், அதை சுற்றிப் பல பூக்களும்;
நட்ட நடுவில், வில்லேந்திய வீரனின் வெண் சிற்பம்!

தொடரும் .......................
 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 41

ஒரு டிக்கட் எடுத்தால், ஒரு வாரம் செல்லுபடியாகும்;
ஒரு நாள் போதாது, முழுத் தோட்டத்தையும் பார்த்திட!

பின் என்னவாம்? Brookgreen Gardens என்ற அதன் அளவு,
ஒன்பதாயிரத்து நூறு ஏக்கர் ஆகும்! மிக பிரம்மாண்டம்.

நூறு ஆண்டு
கள் பழமையான மிகப் பெரிய மரங்கள்; பல்-
வேறு வகைகளில், அழகிய வண்ணங்களில் மலர்கள்.

ஆமைகளின் முதுகில், தன் பொருட்களைக் கடத்தும்,
ஆச்சரியமான இளம் பெண்ணின் சிலை கண்டவுடன்,

அவளிடம் நின்று, புகைப்படம் க்ளிக்கிக்கொண்டேன்;
அவளின் ஐடியாவை நினைத்து, நினைத்து, ரசித்தேன்!

கால் ஓய நடந்த பின், ஜடாக்னி வேலையைத் துவங்க,
காத்திருந்தோம் ஓர் உணவக வாயிலிலே, எங்களுக்கு

வேண்டிய சிற்றுண்டிகளை ஆர்டர் செய்த பின்; வெயில்,
வேறுபாடின்றி அனைவரையும் சமமாகச் சுட்டெரித்தது!

சிங்காரச் சென்னையில் சூடு இருந்தாலும், என்னவோ
இங்கு வறுப்பது போன்று வறுத்து எடுப்பது கிடையாது!

ஓஸோன் படலத்தில், இங்கு, நம் தேசத்தை விட, அதிக
ஓட்டைகள் இருக்குமோ என, சந்தேகம் எழுந்தது நிஜமே!

பசியாறியதும், இனிய இல்லம் அடைந்து, ஓய்வெடுத்து,
ருசியான காஃபி குடிக்க, Golf Cart ல் ஏறிப் பயணித்தோம்!

தொடரும் ..........................
 

Raji Ram

Well-known member
ஆமைகளின் முதுகில், தன் பொருட்களைக் கடத்தும்,
ஆச்சரியமான இளம் பெண்ணின் சிலை....

Courtesy: Google images.


 

Raji Ram

Well-known member
நூறு ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய மரங்கள்.

Courtesy: Google images

 

Raji Ram

Well-known member
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 42

ஒரு சிறுவனும் ஓட்ட முடியும் அந்த கால்ஃப் கார்ட்டை;
இருவர் முன்னாலும், மூவர் பின்னாலும் உட்காரலாம்!

இரு கியர்கள் மட்டும், முன்னாலும், பின்னாலும் செல்ல;
ஒரு பெடல் ஓட்டுவதற்கு; ஒரு பெடல் நிறுத்துவதற்கு.

ஐந்து நிமிட ஓட்டத்தில், ஓர் உணவகத்தை அடைந்தோம்.
சென்று அமர்ந்தோம், வட்ட வடிவ மேஜையினைச் சுற்றி.

பல வகைக் காஃபிக்கள் பரிமாறும் அந்த உணவகத்தில்,
பல வகைச் சிற்றுண்டிகளும், கண்ணாடிப் பெட்டிகளில்!

மதியம் மூன்று மணிக்கு மேல், விலையிலே தள்ளுபடி;
எதையும் வாங்கலாம், அரை விலை மட்டுமே கொடுத்து!

என்னவரின் தங்கை சென்று, 'அமெழிக்க' ஆங்கிலத்தில்,
எங்கள் அனைவருக்கும் ஆர்டர் செய்து வந்தாள். அழகிய

பெண் ஒருத்தி, புன்னகை முகத்துடன், பெரிய டிரேயில்,
கொண்டு வந்து தந்தாள், எல்லாப் பதார்த்தங்களையும்!

தினமும் பிரட்கள் புதிதாகச் செய்யப்படுவதால், தங்கை,
தினமும் காலை உணவுக்கு அதையும் வாங்கிவிட்டாள்!

காஃபியால் தெம்பாகி, அருகிலுள்ள கடற்கரை நோக்கி,
கால்ஃப் கார்ட் நகர, சுத்தமான கடற்கரை காட்சி தந்தது!

மிகவும் சன்னமான மணல்; வெண்மை கலந்த வண்ணம்;
மிகவும் ஆவலுடன், அலைகளில் அளையச் சென்றோம்!

தொடரும் ...........................
 
Top