படி'யை சாமியாக வணங்கும் கிராமம்!

Status
Not open for further replies.
படி'யை சாமியாக வணங்கும் கிராமம்!

படி'யை சாமியாக வணங்கும் கிராமம்!

மதுரை: மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் பழமை வாய்ந்த மலைச்சாமி கோயில் உருவமின்றி காணப்படுவதோடு, கோயிலுக்கு செல்லும் நான்கு 'படி'யையே சாமியாக வழிபட்டு வருகின்றனர் கிராம மக்கள்.


malaisami%201.jpg


மதுரை மாவட்டம், மேலூர் அருகில் நரசிங்கம்பட்டி என்ற கிராமம் யானையை போன்று வடிவம் கொண்டதாலும், யானைமலை சிங்கம் போன்று மலை வடிவமைந்ததாலும் இந்த கிராமம் நரசிங்கம்பட்டி பெயர் பெற்றது. இந்த கிராமம் யானைமலையின் நண்பன் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பழமை வாய்ந்த மலைச்சாமி கோயில் உருவமின்றி காணப்படுவதோடு, கோயிலுக்கு செல்லும் நான்கு படியே சாமியாக வழிபடப்படுகிறது.

பெருமாள் கால் வைத்த இடமே அந்த நான்கு படிகள். இதனால் மக்கள் அந்த படிக்கு மலர்களை காணிக்கையாக்கி வழிபடுவர். கோயில் குளம், சேங்கை யாகம் குளத்தின் பக்கவாட்டில் இருந்து மணலை அள்ளி வந்து ஒரு குவியலாக குவிப்பர். 3 முறை மணலை அள்ளி வந்து மணல் மேட்டில் கைகளால் கொட்டுவார்கள். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது இக்கோயில் ஐதீகம்.

இக்கோயில் சாமிக்கு படையல் கரும்பு. கார்த்திகை மாதமே விவசாயிகள் தங்களது வயலில் விளையும் முதல் கரும்பை கோயிலுக்கு காணிக்கையாக்குவர். கோவில் பூசாரி, கரும்பையே அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்.

செய்தி, படங்கள்: சே.சின்னத்துரை (மாணவ பத்திரிகையாளர்)


'???'?? ??????? ???????? ???????!
 
Status
Not open for further replies.
Back
Top