படித்ததில் பிடித்தது

Status
Not open for further replies.

saidevo

Active member
படித்ததில் பிடித்தது

நீங்கள் மிகவும் ரசித்த தமிழ் இலக்கியப் படைப்புகளைச் சிறு குறிப்புடனும் இணைப்பு முகவரிகளுடனும் இங்குப் பதியலாம். கதை, கட்டுரை, கவிதை போன்ற எழுத்திலக்கிய வகைகள் எதுவானாலும், எக்காலத்த தானாலும் (ஜனரஞ்சகத் திரைப்படம், அரசியல், விளையாட்டு போன்ற துறைகளையும் சர்ச்சைக் குரிய வற்றையும் தவிர்க்கவும்) படித்ததில் பிடித்ததை இங்குப் பகிர்ந்துகொள்ளலாம்:

கோழி
கார்கில் ஜெ.
கோழி

நகைச்சுவைக் கதையொன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இதுவோர் நல்ல உதாரணம்.
 
From a mail I received:

பசுமையான நிணைவுகள்

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
"OLD IS GOLD"

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930 - 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF

· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

*** *** ***
 
Hello Saidevo, I happen to come across your OP ,so nice ,Pls do not mind I do not have tamil fonts ,post 3 ,too good ,simple ,practical,very touchy. One can understand how you liked your child hood days :dance::grouphug:& so on. I personally feel that it lies in ones own Attitude,for any level to go in life.I liked you post ,:clap2::cheer2: for work work.
 
இவறையும் கூடச்சேர்த்துக்கொள்ளலாம்:

புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை

நோட்டுப்புத்தகங்களில் பென்சிலால் எழுதிப்படித்தோம். பள்ளி சென்று வரும் வழியிலோடும் காட்டாற்றை நீந்திக்கடந்தாலும் தலையில் சுமந்த புத்தகப்பை சற்றே நனைந்தாலும் எழுத்துக்கள் அழிந்ததில்லை. நாங்கள் முன்னேறியதெல்லாம் சிம்னி விளக்கிலிருந்து தெரு விளக்குக்குத்தான் என்றாலும் வாழ்க்கையில் முன்னேறத்தவறவில்லை.

ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

ஒலைப்பாத்திரங்களில் பதனீர்க்காரி ஊற்றிக்கொடுக்கும் பதனீரை வாங்கி, மிதக்கும் கட்டெறும்பை எடுத்துப்போட்டுவிட்டு பதனீர் குடித்தாலும் நோய்கள் எங்களிடம் மரியாதையுடன் விலகியே நின்றன.

உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

முதலுதவிக்கு இருந்தது பாட்டி போட்டுக்கொடுத்த நிலவேம்பு சித்தரத்தை கஷாயம்.

படித்ததெல்லாமே தமிழில் தான். பித்தக்கோரஸ் தேற்றமும், மகரந்தச்சேர்க்கையும், பிராண வாயுவையும் கரியமில வாயுவையும் வகுப்பில் பரிசோதனைக்குழாயில் உருவாக்கியதும், பட்டாம்பூச்சியின் வளர்சிதை மாற்றமும்(metamorphosis) எங்களுக்கு என்றென்றும் துணை நின்ற அறிவுத்துணுக்குகளாயிருந்தன. இன்று நினைத்தாலும் இனிக்கின்றன.

இன்னும் இப்படியே நிறைய எழுதிக்கொண்டே போகலாம். அவை இனிய நாட்கள் தாம்.
 
ஈமெயில் முகவரி இல்லயா?
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,
ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,

‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.

*****
 
பாரதி பிறந்தார்
கவிஞர் முருகுசுந்தரம்

பாரதியின் வாழ்க்கைச் சரித்ததத்தை அற்புதமான எளிய கவிதை நடையிலே குழந்தைகளுக்குச் சொல்லும் நூல். படங்கள் மேலும் அற்புதம்!

http://archive.org/details/orr-5246_BharathiPiranthaar
http://www.openreadingroom.com/?p=5246

சந்தவசந்தம் கூகிள் குழுமத்தில் இந்த நூலைப் பகிர்ந்துகொண்ட கவிஞர் இலந்தையாருக்கு நன்றி.
 
தி.ஜா.வின் ’சிலிர்ப்பு’ வாசக, ஆசிரிய மனங்களில் பலவித உணர்ச்சிகளை அலைமோதவிட்டுக் கண்ணீர் துளிக்கச் செய்து சிலிர்க்கச் செய்யும் கதை:
சிலிர்ப்பு
http://www.openreadingroom.com/wp-content/uploads/2012/02/Silirppu.pdf

சுவாரஸ்யமான கதைக் கரு, சரளமான தமிழ் நடை.
கிரகணம்
ppavalamani
கிரகணம் - IndusLadies
 
Status
Not open for further replies.
Back
Top