பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபி
24 Bhajan groups met in California for a marathon bhajan session.
பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
லண்டன் மெட்ரோ பத்திரிக்கையில் 2013 ஜூலை 9ஆம் தேதி ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. கூட்டுப் பிரார்த்தனை செய்வது உடலுக்கு நல்லது.சுவீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.
எல்லோரும் கூட்டாக சேர்ந்து உரத்த குரலில் பாடுவது இருதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் ஒழுங்குபடுத்துகிறது. பாடுவதே நல்லது. அதிலும் கூட்டாகப் பாடுவது இன்னும் நல்லது என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
விஞ்ஞானிகள் ஒரு தொண்டர் குழுவை அமைத்து மூன்று வகையான வெவ்வேறு பாடும் பணியைக் கொடுத்தனர். முதலில் தனித் தனியே வாயை மூடிக்கொண்டு குரல் எழுப்பச் சொன்னார்கள் (ஹம் செய்வது அல்லது ரீங்காரம் செய்வது). இதற்கு அடுத்த படியாக ஒரு துதிப் பாடலைப் பாடச் சொன்னார்கள். கடைசியாக ஒரு மந்திரத்தை மெதுவாகச் ஜெபிக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் குழுவின் நாடித் த்டிப்பும் இருதயத் துடிப்பும் கணக்கெடுக்கப்பட்டது.அப்போது இருதயத்தின் செயல் பாட்டூக்கும் பாடும் முறைக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நீண்ட சொற்கள் கொண்ட பாட்டுக்களைப் பாடுகையில் மூச்சை அடக்கி யோகா செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கிறதோ அந்த அளவுக்கு நற்பலன்கள் கிட்டுவதாக டாக்டர் ஜான் விக்காப் கூறுகிறார்.
கூட்டாக சர்ச்சுகளில் பாடுவதோ, கால்பந்து போட்டிகளுக்குப் போகும் ரசிகர்கள் தங்கள் குழுவின் பாடல்களைப் பாடும்போதோ (இங்கிலாந்து போன்ற நடுகளில் கால்பந்து அணிகளுக்கு கீதங்கள் உண்டு) அவர்களுடைய இருதயத் துடிபு அமைதியாக சீராக இருப்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கோதன்பர்க் பல்கலைகழக ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் விக்காப் பேசுகையில் அடுத்தபடியாக இசை மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராயப்போவதாகக் கூறினார். மூச்சுவிடக் கஷ்டப்படுவோருக்கு பாட்டு சிகிச்சை கொடுத்தால் நால் குணம் கிடக்கும் என்று அவர் நம்புகிறார்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் பஜனை செய்வது நல்லது, கூட்டுப் பிரார்த்தனை செய்வது நல்லது. சுவாமி சிவானந்தா முதல் சத்ய சாய் பாபா வரை பரப்பிய பஜனை புகழ் பெறும் காலம் வந்துவிட்டது. திருப்புகழ் பஜனையும், தேவாரக் கூட்டுப் பிரார்த்தனையும் பாட திட்டத்தில் இடம்பெறும் காலம் வந்துவிட்டது!
அந்தக் கால சினிமாப் பாட்டில் சும்மாவா சொன்னார்கள்:
‘’பஜனை செய்தால் மழை பெய்யும்
பக்குவமாகவே, பஜனை செய்தால் மழை பெய்யும்
சுண்டல் வடையுடன், பஜனை செய்தால் மழை பெய்யும்’’
நமப் பார்வதி பதயே:--- ஹர ஹர மஹாதேவா!
தென்னாட்டுடைய சிவனே போற்றி—
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா!
(இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுதுவோர் எழுதியது ‘’லண்டன் சுவாமிநாதன்’’ என்று வெளியிட அன்புடன் வேண்டுகிறேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள்)
Amma in Houston (USA) doing Bhajan