பச்சை பட்டினி விரதம்

Status
Not open for further replies.
பச்சை பட்டினி விரதம்

பச்சை பட்டினி விரதம்


cf10cce1-1101-42c1-8313-e53621ea1a95_S_secvpf.gif



தமிழ்நாட்டில் உள்ள சக்தி வழிபாட்டிற்குரிய கோவில்களுள் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோவில். கண்ணனூர் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்ற வரலாற்று சிறப்பு பெயர்களும் இந்த திருத்தலத்திற்கு உண்டு.


இக்கோவிலில் உள்ள மாரியம்மன் உற்சவர் சிலை விஜய நகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டதாகும். விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் (கி.பி.1706-1732) சமயபுரம் மாரியம்மனுககு தனி கோவில் எழுப்பப்பட்டது. பொதுவாக, வேண்டுதல் நிறைவேற தெய்வங்களை வேண்டித்தான் பக்தர்கள் விரதம் இருப்பார்கள்.

ஆனால் சமயபுரம் மாரியம்மனோ பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள். மாசி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழாவுக்கு முந்தைய 28 நாட்களுக்கு இந்த அம்மனுக்கு தளி கை நைவேத்தியம் கிடையாது. அம்மன் பக்தர்களுக்காக விரதம் மேற்கொள்வதே அதற்கு காரணம்.

அம்மனின் இந்த விரதத்தை ‘பச்சை பட்டினி விரதம்’ என்கிறார்கள். அம்மனின் விரத நாட்களில் அவருக்கு மாவிளக்கு, இளநீர், கரும்பு, பானகம், நீர் மோர் ஆகியவை மட்டுமே நைவேத்தியம் செய்கிறார்கள்

????? ??????? ?????? || pachai pattani virtham
 
Status
Not open for further replies.
Back
Top