பங்குனி சுக்ல த்ரயோதசி

kgopalan

Active member
மதன த்ரயோதசி 30=03=2026

சைத்ர சுக்ல பக்ஷ த்ரயோதசி இன்று மாலை மன்மதன்; ரதி; இவர்கள் நண்பன் வஸந்து ருது தேவனுடன், கரும்பில் ஆவாஹனம் செய்து பூஜிக்க வேன்டும்.தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். நிர்ணய ஸிந்து-67; வஸந்தாய நமஸ்துப்யம் வ்ருக்ஷ குல்ம லதாஸ்ரய ஸஹஸ்ர முக ஸம்வாஸ காமரூப நமோஸ்துதே.

நமோஸ்து பஞ்ச பாணாய ஜகஹ்லாத காரிணே மன்மதாய ஜகன்நேத்ரே ரதிப்ரீதி ப்ரியாய தே என்று ப்ரார்த்தனை செய்து கொண்டு இருவரும் நமஸ்காரம் செய்யலாம். இக்ஷு சாபாய ; அநங்காய; மன்மதாய; காமாய ; ஸ்மர சரீராய , புஷ்பாஸ்த்ரயாய; வஸந்த ஸகாய; ஸ்மராய; க்லீம் காம்தேவாய; ஹ்ரீம் ரத்யை நமஹ என்று சொல்லி அர்சிக்கலாம். தூபம். தீபம்; நைவேத்யம் ; கற்பூரம் காட்டவும். இதனால் தம்பதிகளுக்குள் அதிக அன்பும் ப்ரேமையும் உண்டாகும்.
 
Back
Top