• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற இஸ்

Status
Not open for further replies.
பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற இஸ்

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற இஸ்லாமிய பெண் தானத்திலும் தாராளம்!

(18/06/2015)

டெல்லி : பகவத் கீதை போட்டியில் வென்ற இஸ்லாமிய மாணவி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது பிரதமரின் நலத்திட்ட உதவிகளுக்காக அவர் 22 ஆயிரம் ரூபாய் நிதியளித்தார்.

mar.jpg


இஸ்கான் அமைப்பு சார்பில் அண்மையில் பகவத்கீதை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் மும்பையை சேர்ந்த 12 வயது மரியம் என்ற இஸ்லாமிய மாணவி முதல் பரிசை வென்றார். இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த மரியம் அவரிடம் வாழ்த்து பெற்றார்.


mar1.jpg

டெல்லி பிரதமர் அலுவலகத்தில் தனது பெற்றோருடன் பிரதமரை சந்தித்த மரியம், பிரதமர் நிவாரண நிதிக்காக 11 ஆயிரம் ரூபாயும், பிரதமரின் துய்மை இந்தியா திட்டதிற்கு என தனியாக 11 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கினார்.


அவற்றை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேத்திர மோடி, ''பிற மதத்தின் மீது நீ கொண்டுள்ள ஆர்வம் மற்ற இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்!" என்று வாழ்த்தினார். மேலும் மரியத்திற்கு 5 புத்தகங்ளையும் மோடி பரிசாக வழங்கினார்.


http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
 
Status
Not open for further replies.
Back
Top