பகல் பத்து திருமொழி ஐந்தாம் நாள்

பகல் பத்து திருமொழி ஐந்தாம் நாள்

பகல் பத்து திருமொழி ஐந்தாம் நாள்
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !


காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து


நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே


மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற


ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.


எல்லா வுலகங்களையும் ப்ரளய காலத்திலே திருவயிற்றிலே வைத்து
பிரளயம் நீங்கினபிறகு அவற்றை வெளிப்படுத்திய ஜகத்காரணபூதனே!
அரங்கமாநகரளானே!
உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான செருக்கினாலே
பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து பாபராசியை
வெகுதூரம் உதறித்தள்ளி
ஜயகோஷம் செய்து
யமபடர்களின் தலைமேல்
அடியிட்டுத் திரிகின்றோம்.


' சம்சார வாழ்வு , விஷம் உண்ட வாழ்க்கை போன்றும்..விஷ முறிவு மருந்தாக இறைவனின் பெயர்கள் ..திரு நாமங்கள் இருப்பதாகவும் , அவற்றை உரைப்பதன் மூலம் விஷம் முறிந்து, மீண்டும் இவ்வுலகில் பிறக்காதிருக்கலாம் என்று ஆழ்வார் குறிப்பிடுவதாக பெரியோர்களின் விளக்கங்கள் உள்ளன .'
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் சரணம்.
 
Back
Top