நூற்றியெட்டு பிள்ளையார் கோயில், காரைக்க&

Status
Not open for further replies.
நூற்றியெட்டு பிள்ளையார் கோயில், காரைக்க&

நூற்றியெட்டு பிள்ளையார் கோயில், காரைக்குடி :


1978614_610269485730604_2120104231_n.jpg


108 பிள்ளையார் கோயில், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவன் மற்றும் பார்வதி தம்பதியினரின் மகனாகிய கணேசருக்காக எழுப்பப்பட்டதாகும்.

இக்கோயில், 108 கணேச மூர்த்திகள் என்றழைக்கப்படும் 108 சிலைகளைக் கொண்டுள்ளதால், இது நாடெங்கிலும் புகழ் பெற்று விளங்குகிறது. இத்தனிச்சிறப்பின் காரணமாக, பல பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கணேசர், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர்.

அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து கணேசரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் கணேசரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

இங்கு கணேசரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான ‘லட்டு’ மற்றும் ‘மோதகம்’ ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.


Source: Nagarathar
 
Status
Not open for further replies.
Back
Top