நீலகண்டேஸ்வரர் கோவில்

Status
Not open for further replies.
நீலகண்டேஸ்வரர் கோவில்

நீலகண்டேஸ்வரர் கோவில்

கோவில் அமைப்பு:

9bc19e44-e871-4136-84b4-d9e662799e75_S_secvpf.gif



இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயிலகள் உள்ளன. முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன.

ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை. ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது.

இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது.

பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்ள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது.

மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும்.

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வழிபடலாம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இந்த கோவிலில் மூலவருக்கு நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, மிகக் கடுமையான ஆலகால விஷம் தோன்றியது. அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார்.

அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க, உமையவள் சிவனின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டதால், விஷம் கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால் சிவபெருமான், நீலகண்டர் என பெயர் பெற்றார். ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால், அந்த விஷத்தன்மையை குறைக்க வேண்டியே இந்த தலத்தில் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.

அபிஷேகத்தின் போது பாத்திரம், பாத்திரமாக சுமார் 5 லிட்டர் வரை மூலவரான சிவலிங்கத்தின் மீது நல்லெண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் கீழே வழியாமல், சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது இந்த கோவிலில் இதுவரை நடைபெற்று வரும் ஆச்சரியம் அளிக்கும் அதிசயம்.

நாள் பூராவும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால், அபிஷேகம் செய்த அடுத்த நாள், மூலவரை பார்த்தால் அவரது திருமேனி கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.

எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு மாறாக, சொர சொரப்பாகவே இருக்கிறது. இது தவிர திருநீலக்குடியில் சிவனுக்கு தைலக்காப்பு அலங்காரம் மிகவும் விசேஷமானது. சுவாமியின் கோபத்தை தணிக்க, அம்பாள் தைலம் சாத்தி கோபத்தை தணித்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

தீராத தலைவலி நீங்க, தைலக்காப்பு பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் ஏராளம். கோவிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இங்குள்ள வில்வத்துக்கு ஐந்து இதழ்கள் உள்ளன.

நடை திறந்திருக்கும் நேரம்....

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி....

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்ற திருநீலக்குடி. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடி வர சாலை வசதி உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது.

?????????????? ?????? || sri neelakandeswarar temple
 
Status
Not open for further replies.
Back
Top