"நிர்பயா"...1... [ ஒரு தமிழ் கதை..].......{ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
"நிர்பயா"...1... [ ஒரு தமிழ் கதை..].......{ tvk ]

13658930_1172888349429488_3793493067732519781_n.jpg



மேலே இருக்கும்படத்தில் இருப்பது "நிற்பாய" என்கிற ஒரு ஸ்டவ்.. இது அறுவது..எழுவது வருடங்களில் இந்தியன் ஆயில் கார்பரேஷனால் அறிமுகம் செயப்பட்டது..இதன் விசேஷம் என்னவென்றல்..குறைந்த மண்ணண்ணெய் செலவு..அதிக வெப்பம்..ஆகவே சீக்கிரம் சமையல்..இத்யாதி..இத்யாதி..ஆனால் இது டெல்லியில் மட்டுமே கிடைத்தது..
என் சகதர்மிணிக்கு ரேடியோ..விளம்பரங்களை கேட்டு..கேட்டு..இந்த ஸ்டவ் வாங்கவேண்டும் என்ற விபரீத ஆசை தொற்றிக்கொள்ள..அதன் விளைவு..?

"ஐயோடா"....எவரெஸ்ட் சிகரம் கூட ஈஸியா..ஏறியிருப்பேன்..


எழுதுகிறேன் தொடர்ந்து..


Tvk
 
I think in seventies and eighties,when gas connections were scarce, there was a craze for IOCs.stoves.

Anyone going to chennai/south would get a request for getting these stoves from delhi.

Train and air travellers would buy these stoves and take with them.

There was maximum demand for this next only to moodas[ cane stools] .
 
I think in seventies and eighties,when gas connections were scarce, there was a craze for IOCs.stoves.

Anyone going to chennai/south would get a request for getting these stoves from delhi.

Train and air travellers would buy these stoves and take with them.

There was maximum demand for this next only to moodas[ cane stools] .



Yes.. This is what this story about...

TVK
 
hi

these stoves/IOC gas stoves very high demand in ARMY CANTEEN STORES....when i was posted in delhi cantt...i got it

from army canteen. very chap and no sales tax....even we have kerosene in reduced rates...it was very helpful

during delhi winter...
 
C n P for the sake of easy reading ! :ranger:

"நிர்பயா:----2... [ tvk ]


"நிற்பயா" வேட்டை மறுநாள் மாலையே தொடங்கியது.. இந்த மாதிரி கண்ட..கண்ட..சாமான்கள் எல்லாம் [ !! ]..கிடைக்கும் இடம் பாரீஸ் கார்னர்தான் என்பது உலகறிந்த சமாசாரம்..கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் ஆரம்பித்தது ..தேடும் படலம்.. அருணா ஸ்டோரில் இல்லை..அங்கு இல்லை என்றல்..அந்த தெருவில்..தேடுவது வீண் வேலை.. நான் செய்த தவறு.. இது வேற எங்கு கிடைக்கும் என்று கேட்டு தொலைச்சதுதான்.. பந்தர் தெருவுக்கு போங்க..அங்கே இல்லாவிட்டால் ..காசிச்செட்டி தெரு..இல்லை என்றல் ..செம்புதாஸ் தெருவும்..லின்கிசெட்டி தெருவும் பாருங்க..
இந்த கடைக்கு போனால்...அந்த கடைய ..பாருன்னாங்க..அந்த கடைக்கு போனால்..அடுத்த தெரு..கடைக்கு போங்கன்னாங்க..இப்பிடி சுத்தி சுத்தி....மிஞ்சினது....ப்ளவர் பஜார்..போலீஸ் ஸ்டேஷன் மட்டும்தான். அனுமார்கூடசீதாதேவியைதேடிஇலங்கையில்இவ்வளவு....சுத்த ியிருக்கமாட்டார்.. ராயல் ஸ்டோர்காரர்..கடைசியில் ஒரு வழி சொன்னார்.. சார்..நீங்க இந்த ஸ்டவ்வை.. தேடுவது வீண் வேலை...பேசாமல் இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஆபீஸிலையே விசாரிங்கள்....அவர்கள் சொல்வார்கள் எங்க கிடைக்கும்னு....இது சரின்னு பட்டது.... இந்த ஞானோதயம்..வருவதற்கு....இரண்டு மணி நேர அலைச்சல்..கால் வலி..ஒரு வழியாக வீடு போய் சேர ஒன்பது மணி..

மறுநாள் ஆபிசிலிருந்து காலை முதல் டிரை பண்ணி மத்தியானம்தான் ஐ.ஓ.சி. லைன் கிடைத்தது...அப்பரேடர் 'அம்மணியிடம்'..என் தேவையை சொல்லி...கொஞ்சம் வெய்ட்பண்ணி மார்கெட்டிங் டிபர்ட்மென்ட், சேல்ஸ் டிபர்ட்மென்ட் என்று மாறி..மாறி .பேசி....கடைசி ரிசல்ட் என்னவோ ஜிறோதான்....'நிற்பயா'.ஸ்டவ் டெல்லியில் மட்டும்தான் சேல்ஸ்....மற்ற இடங்களில் எல்லாம் கிடையாது... ..அரிச்சந்திர உண்மை அப்பத்தான் புரிந்தது...

வீட்டில் விவரத்தை சொன்னவுடன்.."டெல்லி என்ன..அமேரிக்காவாக இருந்தாலும்....நீங்க கொண்டுவர மாட்டிங்களா..?"....பெண்டாட்டியின் இந்த 'ஐஸ்'....நன்றாக இருந்தாலும்..எப்படி? என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது...எனக்கு ஹெட் ஆபீஸ்..பம்பாயாக போய்விட்டது....டெல்லி வெறும் டிவிஷினல் ஆபீஸ்தான் ..இல்லையென்றல் ஒரு 'நிர்பயா' டூர் போய்...வாங்கியிருக்கலாம்.....யோசிச்சு..யோசிச்சு..ம ண்டை குழம்பினதுதான் மிசசம்...

ஒவ்வொரு சனிக்கிழமை..சாயந்தரமும்....என் நண்பர்களும் நானும் ஒரு சின்ன மீட்டிங் போடுவோம்..வெட்டிபேச்சு எதுவும் இருக்காது....பொதுவாக இலக்கியமும்..கவிதைகளும்தான் ...நிறைய விவாதங்கள்..இருக்கும்.. இந்தவாரமீட்டிங்முடிவில்....கசுவலாககேட்டேன்..ஏம்பா. .யாருக்காவது..டெல்லியில்..யாரையாவது தெரியுமா..?..ஏன் என்னவிஷயம்..? டெல்லிக்கு ஒடப்போகிறாயா..?..பதில் கேள்வி....'நிற்பயா'..வேட்டயபற்றி சொன்னேன்....
நண்பர் ராஜேந்திரன்..பெரிதாக சிரித்தார்...உனக்கு நிர்பயா ஸ்டவ்தானே..வேணும்..? வாங்கிட்டா போச்சு....எனக்கு தெரிந்த ஒருவர்..குபெரன்னு பேர்...தமிழ்நாடு எக்ஸ்ப்றேஸ்ல.. பான்ட்ரி கார்ல வேலை செய்கிறார்...வெள்ளிகிழமை இங்கிருந்து போயிட்டு..புதன் கிழமை திரும்புவார்.. இந்த நிர்பயா ஸ்டவ் தெரிந்தவர்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்...நான் அவரிடம் சொல்லிவைக்கிறேன்....நேற்று அவர் கிளம்பி போயிருப்பார்....அடுத்தவாரம் வியாழக்கிழமை சொல்லிடறேன்.. நீ அதற்கு அடுத்த வாரம் புதன் கிழமை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு போய்..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பான்ட்ரி கார்ல இவர போய் பார்...என் பேரை சொல்லு..அவர் வாங்கி வந்திருப்பார்..மேற்கொண்டு ஏதாவது காசு கேட்டால் கொடு...

.ஆஹா...கடவுள் ஒரு கதவை மூடினால்..மற்றொரு கதவை திறப்பான் என்ற கிறிஸ்துவ வாக்கியம் நினைவுக்கு வந்தது....நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்....

'நிற்பயா' வேட்டை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது...

[தொடரும்]...
 
Status
Not open for further replies.
Back
Top