நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!

Status
Not open for further replies.
நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!

goldbankofengland.jpg


எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!
ஒவ்வொன்றும் 13 கிலோ எடை (29 பவுண்டு)!
இன்றைய விலையில் ஒவ்வொரு கட்டியும் 350,000 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 3,50,000 X 89 ரூபாய்)
மொத்த மதிப்பு 15,0000 கோடி £150 billion பவுண்டுகள்
வரிசை வரிசையாக தங்கக் கட்டிகள்!!!


நாலு லட்சம் தங்கக் கட்டிகள் வேண்டுமா? பார்க்க மட்டும் தான்! லண்டனுக்கு வருவோர் ‘த்ரெட் னீடில் Thredneedle Street (ஊசி நூல் தெரு) ஸ்ட்ரீட்’ டுக்குப் போய் ‘’பாங்க் ஆF இங்கிலாந்து’’ Bank of England பொக்கிஷ அறையில் உள்ள தங்கக் கட்டிகளைப் பார்ப்பது வழக்கம். இனிமேல் லண்டனுக்கு வராமலேயே நீங்கள் பார்க்கலாம். வீட்டில் கம்ப்யூட்டரும் இன்டெர்னெட்டும் (Internet) இருந்தால் போதும்.


இங்கிலாந்து வங்கி என்பது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்றது. அரசாங்கத்தின் செல்வமான தங்கக் கட்டிகள் மற்றும் புதிது புதிதாக அடிக்கும் கரன்ஸி நோட்டுகள் எல்லாம் இங்கே மலை போல குவிந்திருக்கும். இப்போது இதை ஆப்பிள் அல்லது கூகுள் அப்ளிகேஷன் மூலம் (Apple Store, Google play market place; 360 degree panoramic view) பார்க்கலாம். அப்ளிகேஷன் களை இலவசமாகப் பெறலாம்.


இங்கிலாந்து வங்கியின் கதவுகள் குண்டு துளைக்க முடியாத கதவுகள்! பின்ன என்ன? இவ்வளவு தங்க கட்டிகளை வைத்துக்கொண்டு, உதைந்தால் திறக்கக்கூடிய மரக் கதவா போட்டிருப்பார்கள்? பத்து பவுண் நகைகளைப் பாதுகாக்கவே அரிசிப்பானைக்குள்ளும் தலையணைக்குள்ளும் ஒளித்துவைக்கிறோம்.


ஒவ்வொரு மாதமும் வங்கியின் தலைவர்கள் இங்கே கூடி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அந்த அறிவிப்பு வரும் வரை நிதித் துறையில் உள்ளவர்களும், பங்கு மார்க்கெட்காரர்களும், என்னைப் போல வீட்டுக்கு மார்ட்கேஜ் (வீட்டின் பெயரில் வாங்கிய கடன்) பாக்கி உள்ளவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்போம். ஆனால் கடந்த ஒரு வருடமாக வட்டி விகிதம் மிகவும் குறைவு. குளிர்ச்சியான செய்தி. வங்கிக் கூட்டம் நடக்கும் அறையே ராஜ சபை போல இருக்கும்.
gold-3.jpg


ஒரு காலத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ராஜ சபையிலும் இப்படித் தங்கம் குவிந்திருந்தது. உலகிலேயே பெரிய தங்க நாணயத்தை வெளியிட்டதும் நாம்தான்! திருவனந்தபுரம் பத்மசுவாமி கோவில் புதையல் பற்றிப் படிதவர்களுக்கு இதெல்லாம் கொசுறு! விஜயநகர சாம்ராஜ்யத்தின் செல்வத்தை மதி[[இட வந்தவர்கள் அதை மதிப்பிட முடியமல் மலைத்து திரும்பிப்போய்விட்டார்கள். கஜினி முகமது, சோமநாதபுரத்தைக் கொள்ளையடித்து சிவன் சொத்தைக் கொண்டுபோய் கஜின் நகரம் முழுவதும் தங்கக் கதவு போட்டானாம்.


இந்தியாவின் அபார, அபூர்வ செல்வம் பற்றி நான் எழுதிய ஏழெட்டு கட்டுரைகளின் தலைப்பு கீழே உள்ளது. படித்தால் மலைத்துப் போவீர்கள்.
1.கொலவெறி வைரம் 2.ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின உருண்டை 3.அமுதசுரபி எங்கே? மயிலாசனம் எங்கே? சங்கப்பலகை எங்கே? 4.Indian Wonder: Largest Golden Temple in the World 5.Hindus need an Indiana Jones 6.Krishna’s diamond in USA? 7.Gem stones in Kalidasa and Tamil Literature 8.Indiahhhhhh….. Richest country in the World (Parts 1 to 6) 9.Largest gold coin
gold-1.jpg
 
Dear PJ
Thanks for reading it.

I deliberately posted the English version in General section so that lot of people will go for the FREE application. Normally Tamil readers are not that familiar with downloading applications or soft wares. Tamil version is posted here. The same matter is loaded in my two blogs and a few other websites simultaneously.
 
Status
Not open for further replies.
Back
Top