• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்

நாளை(27/02/2021),மாசி மகம் மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சித்திரம்.

ஸ்வாமியின் தனியன்:

"அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||"

"பட்டத்து இளவரசாகிய யாமுனாசார் யரைத் தூதுவளை தந்து,மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்."

இவருக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்ந்து பார்ப்போம்.

1.நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப்பகுதியான
மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார் 'ராம மிஸ்ரர்.' நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரை ஸ்லோகத்தில் உள்ள ராம மிஸ்ரர் இவரே.இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது ராமராக பரசுராமர்,சீதாராமர்,
பலராமருக்குப் பின் கொண்டாடுகிறார் கள்.

ஸ்ரீதேசிகன் ஸ்வாமி "யதிராஜ சப்ததி"
7 ஆவதுஸ்லோகத்தில்,
"அனுஜ்ஜித ஷமாயோகம்,
(பரசுராமர் பொறாமையால்,
ராமபிரானிடமேசண்டையிட்டார்.கோபத்தால் சத்திரிய குலத்தையே அழித்தார்.
ஆனால் மணக்கால் நம்பிகளிடம் இந்தக் குணங்கள் துளியும் இல்லை)
அபுண்ய ஜனபாடகம்,
(ராமர் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப்
பட்ட ராட்சசர்களை அழித்தார்.நம்பி யாரையும்அழிக்கவில்லை.புண்யஜனங்களுக்கு உபதேசித்தார்/உதவினார்)
அஷ்புருஷ்த மத ராகம்,
(பலராமர் லெளகீகச் செயல்களில் அதிக ஈடுபாடு/ருசி வைத்தார்; நம்பி எதன் மேலும் பற்று/அக்கறை இல்லாமல் பகவத்/பாகவத/ஆசார்ய கைங்கர்யமே பிரதானமாக இருந்தார்)
தும் ராமம் துரியம் உபாஸ்மகே"
(குறை/குற்றம் ஒன்றில்லாத நான்காவது ராமரான ராமமிஸ்ரரை உபாசிப்போம்)
என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார்.

அந்த வகையில்ஆதிசேஷனின் அவதாரங்களான இளைய பெருமாள்
(லட்சுமணர்),பலராமர், லட்சுமணரின் அம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் ஆகியோருக்குப்பின்
நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

2.மண்ணில் மார்புற, விழுந்த மஹநீயர்கள்

மணக்கால் நம்பியின் ஆசார்யர்
ஶ்ரீ உய்யக்கொண்டாரின் தேவியர், இளமையிலேயே பரம பதம் அடைந்து விட்டதால்,அவருடைய குடும்ப காரியங்களையும்,இரு திருக் குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உத்தம சீடர் நம்பி.ஒரு நாள் காலையில்,பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில் சேறும்,சகதியுமாக இருந்தது.அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடிய
வில்லை.நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுத்தார்.அவர் முதுகின் மீது ஏறிச் சென்று குழந்தைகள அந்த இடத்தைக் கடந்தனர் ! அதனாலேயே அவர் மணல்(க்) கால் நம்பி ஆனார் என்றும்,அவர் இருந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.!!

ஒரு சமயம்,ஶ்ரீரங்கத்தில் ராமாநுஜருக்கு உணவில் விஷம் கலந்து விட்டனர்.(உஞ்சவிருத்தியின் போது).அந்த சூழ்நிலையில் அவர் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி,அருந்தவச்
சீடரைப் பார்க்க விரைந்து வந்தார்.தம் ஆசார்யர் வருகிறார் என்றறிந்து,(திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும்)
அவரை எதிர்கொண்டு அழைக்க ராமானுஜர் திருக்காவேரிக்குச் சென்றார். ஆசார்யரைக்கண்டவுடன்,
அந்த மத்யான வெயிலில்,காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.யாராவது தண்டம் சமர்ப்பித்தால்,ஆசி கூறி உடனே எழச்சொல்லி விடுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தார்.
சிறிதுநேரம்,உடையவர் சுடுமணலில் கிடந்தார்.அங்கு சுற்றி நின்றிருந்த
வர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து நம்பியைப்
பார்த்து''இது,என்ன ஆசார்ய,
சிஷ்ய நிஷ்டை''என்று கூறிவிட்டு,
ராமானுஜரை அள்ளி எடுத்துக் கொண்டார்.உடனே நம்பிகள் ''உம் போன்ற ஒருவர் வர மாட்டாரா,
என்று தான்காத்திருந்தேன்,"
என்று அவரைத் தழுவிக் கொண்டு,
"இனிமேல் நீரே உடையவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்.அவருக்குத் தளிகைசெய்வது, திருமேனியைக்
கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும்"என்று
நியமித்தார்.

3.)தூது விடுத்து,வைணவம் வளர்த்த, தூய்மனத்துப் பெரியோர் !!

நம் சம்பிரதாயத்தில் தூதுக்கு ஒரு தனிவலிமை உண்டு.
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் தூது,மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் தூது என்று.அந்த வகையில் இந்த நான்காவது ராமர்,சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய ஆளவந்தாருக்கு "தூதுவளைக் கீரையையே" தூது அனுப்பினார்.மன்னரை ஒரு சாமான்யர் எளிதில் சந்திக்க முடியாததால், அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை அரண்மனைக்குத் தினமும் கொடுத்துவந்தார் ராம மிஸ்ரர்.
திடீரென்று ஒருநாள் நிறுத்திவிட்டார்.
இதனால் ஆளவந்தாருக்கு ஆர்வத்தைத் தூண்டி,இவரை அழைத்து வரச்செய்து சந்திக்கும், சூழ்நிலையை உண்டாக்கி விட்டார்.அந்த முதல் சந்திப்பையும்,
அதனால் ஏற்பட்ட மற்ற சந்திப்புகளை யும், பயன்படுத்தி அரசருக்கு,
ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து, ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து,பெரிய பெருமாள் முன்னர் நிறுத்தி விட்டார்.அன்று வந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.அரசர் ஆளவந்தார், "பரமாசார்யர்" ஆளவந்தாராகி விட்டார்.

ராமானுஜர் தம் உத்தமசீடர் முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானை
பெரியகோயில் நம்பியிடம், தூது அனுப்பிஅவரிடம் இருந்த கோயில் பொறுப்பையும்,சாவியையும் வாங்கினார்.சாவி மட்டுமா கிடைத்தது? அரசர் ஆளவந்தார் ஆசார்யராக மலர்ந்ததைப்போல்,பெரிய கோயில் ஜீயர்,"திருவரங்கத்து அமுதனார்" ஆக மலர்ந்தார்..நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு "இராமானுச நூற்றந்தாதி" என்னும் பிரபன்ன காயத்ரியைப் பாடிக் கொடுத்தார்.

4.பகவத் கீதைக்கு பாஷ்யம் சொன்ன, ஞானாசார்யர்கள்:

தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி
ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து அவரைத் திருத்திப்பணி கொண்டார். நம்போன்றோரைத்திருத்திப் பணிகொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானார் அருமையான
"கீதா பாஷ்யம்" அருளிச்
செய்தார்.

5.பெண் குழந்தைகளைப் பேணிக்காத்த பேராளர்கள்

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகளைப் பேண வேண்டும்(Beti Bachao) என்பதை அரசாங்கம் அடிக்கடி,
அறிவுறுதத வேண்டிய நிலையில் உள்ளோம்.ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று (குறிப்பு 2)பார்த்தோம்.

உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக்குமாரத்தி,
அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்னை களைஏற்படுத்தினர்.அந்தக் காலத்து வழக்கப்படி,பெண்
வீட்டுச் சீர்வரிசையுடன் "சீதனவெள்ளாட்டி" என்று ஒருவரை,வேலக்காரர்(காரி) ஆகவும் அனுப்ப வேண்டும்.பெரிய நம்பிகளுக்கு அவ்வாறு அனுப்பும் அளவு வசதி யில்லை.ஆனால் புகுந்தவீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக் காட்டினர்.எனவே அவர்தம்தந்தை
யாரிடம் முறையிட்டார்.அவர் 'என்னிடம் சொல்லி என்ன பயன்?உன் அண்ணன் ராமானுஜரிடம்சொல்'என்றார்.ராமனுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் எத்துனையோ பேர் இருக்க,தமக்கு மிக வேண்டியவரும்,
துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லும்
அளவுக்கு,உயர்ந்த ஆசார்யர் முதலியாண்டானை அனுப்பி வைத்தார்.

மேலும் உடையவர் காலத்தில் பல பெண்களுக்கு--கூரத்துஆண்டாள்,
பொன்னாச்சியார்,அம்மங்கி அம்மாள்,
திரிபுராதேவியார்,கொங்கில்பிராட்டியார்-சம்பிரதாய விஷ்யங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்.

மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:

"நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே !
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே !
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே !
தமிழ்நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே !
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே !
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே !
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே !
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!"

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).



1614400356755.png
 

Latest ads

Back
Top