• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நரஸிம்ம அவதார (தோற்றம்) மகிமை

நரஸிம்மம்--ஆம் நரஸிம்மம் அவதரிக்கும் வேளை
வந்து விட்டது. ஹிரண்யனின்(அசுரன்) தவபலம்-
முற்றும் கரைந்து போன வேளையில்-
அவனது வரத்தின் படி பகலுமின்றி-இரவுமின்றி
அந்தி-சந்தி வேளை- சூரியனும் தன் பயண
திசை மாறும் தருவாயில்-மேல் திசையில் நுழையும் முன் -

சரியான தருணமிதுவென -நாராயணன்--நரஸிம்மமாய்
அவதரிக்க ஸங்கல்பித்த வேளையது-
அசுரன் ஹிரண்யகசிபு பிள்ளை ப்ரஹ்லாதனிடம்
'எங்கே உன் நாராயணன் 'ஆர்ப்பரித்த கேள்விக்கணையில்-

எங்கும் உளன் தூணிலும் உளன் துரும்பிலும் உளன்'
என்ற பிள்ளையின் நாவில் வந்து பின் தூணில்
குடிகொண்டதே- நாராயண நாரஸிம்மம்;

பிள்ளையின் பதிலால் வெகுண்டு-கடுஞ்சினத்துடன்
ஒர் தூணைக் காண்பித்து 'இத்தூணில் உளனா உன்
நாராயணன் ' கேட்ட தகப்பனுக்கு
அஞ்சாது உறுதியுடன் "உளன்" என உரைத்திட்ட
நம்பிக்கையில் அத்தூணில் வந்து ஆவிர்பவித்தது
நாராயண-நரஸிம்மம்.

அசுரன் தன் காலிலே வந்து ஒளிந்திட்ட காலனை
அறியானாய், ஆங்காரத்துடன் காலால் அத்தூனை
உதைத்திட்ட வேளையில்--------
அண்ட சராஸரங்களும் கிடு-கிடுவென நடுங்கிட
அண்டங்கள் ஒன்றோடொன்றிணைந்து உருண்டாற்போல்
விவரிக்கவொண்ணா பேரொலியுடன்
இரண்டாகப் பிளந்திட்ட தூணிலிருந்து
ஹா ஹா -- ஹல-ஹலவென
ஆகாச மின்னலென- பேரொளி- வெளிப்பட்டதே;

பேரொளியும்-பேரொலியும் இணைந்து இரண்டும்
கலந்த உருவாய் நர-ஹரியாய் ப்ரளயகால ஸிம்மமது
பிடறிமயிர்சிலிர்த்து அட்டகாசனாய்-
ரௌத்திரஸிம்மமது அடியெடுத்து அசுரனைப் பற்றி
உள்ளுமல்லா- வெளியுமல்லா வாசற்படியிலமர்ந்து
வானுமல்லா- மண்ணுமல்லா- தன் மடியில் கிடத்தி-
ஆயுதமேதுமின்றி தன் கூறிய நகங்களைக்
கொண்டு- அவுணன் உடலைக் கிழித்து இரக்தஸிம்மமாய்
அவனுதிரம் பருகியதே புச்சஸிம்மம் . பின்னும்
ஆவேசம் தணியாது (அ) கோரஸிம்மமது கண்டு--

வானவரும், மார்பினிலே உறைந்தவளும் கூட
அஞ்சி ஒடுங்கி அருகினிலே வர அஞ்சி
உரைந்திட்ட - வேளைதனில் வந்துள்ளது-
ஸாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனே என
உணர்ந்திட்ட பாலகன் ப்ரஹ்லாதன்
பக்திமிகு தெய்வக்குழந்தையது - பூர்ணஸிம்மத்தினருகே
சென்றவ்வேளயில் உக்ரஸிம்மத்தின் ஆவேசமது தணிந்து
பக்தவத்ஸலனாய்- கனிவு மிகு வாத்ஸல்யத்துடன்
ஸாந்தஸிம்மமாய் ப்ரஹ்லாத வரதனாய்

கன்றீன்ற கோவினது கருணையுடன்
அபயங்கரஸிம்மமாய் வா குழந்தாய் வேண்டுவது கேள்
என விளம்ப அசுரனானாலும் என் தந்தை அவரை
மன்னித்து ஏற்றுக்கொள் என் இயம்பிட
பாலகனே உன் போன்ற அருட்குழந்தை ஈன்றவனுக்கு
பேறுண்டு என வரமருளியது ஆனந்தஸிம்மமது-
பிராட்டியும் மற்றோறும் அங்கேக பிராட்டியுடன்
பத்ரஸிம்மமாய்- ஸ்வேதஸிம்மம்--- மாலோலன்
கனிவும் - அருளுமாய் அனந்தஸிம்மமாய்
அருளுடன் விளங்கினானே

துஷ்ட நிக்ரஹத்துடன் ---ஸிஷ்ட பரிபாலனுமும்
ஒருங்கே இணைந்த அற்புத அவதாரம்
ஸ்ரீ ந்ருஸிம்ம அவதாரம்

ந்ருஸிம்மனை நினத்த போதிலே
நெஞ்சில்நிம்மதியும்_துணிவும் நிறைந்திடும்
ஸர்வாபீஷ்டங்களும் கைகூடும்.
ஸகல பயங்களும் மிரண்டோடும். ஸமஸ்த
பாபங்களும்
தொலைந்து_போகும்
ஸர்வ மங்களுமுண்டாகும் .

ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து
ஸமஸ்தலோகா ஸுகினோ பவந்து
ஸமஸ்த மங்களானி பவந்து
ந்ருஸிம்மன் மலரடி சரணம்.

பக்தியுடன்
வத்ஸலாவிஜயராகவன்

மாதா ந்ருஸிம்ஹச்ச; பிதா ந்ருஸிம்மா:
ப்ராதா ந்ருஸிம்ஹச்ச; சஹா ந்ருஸிம்மா:
வித்யா ந்ருஸிம்ஹோ; த்ரவிணம் ந்ருஸிம்மா:
ஸ்வாமி ந்ருஸிம்ஹச்ச; ஸகலம் ந்ருஸிம்மா:
இதோ ந்ருஸிஹச்ச; பரதோ ந்ருஸிம்மா:
யதோ-யதோ-யாமி ததோ-ததோ ந்ருசிம்மா:
ந்ருஸிம்ம தேவா அபயம்நகிஞ்சித் -தஸ்மாத்
ந்ருஸிஹம் சரணம் ப்ரபத்யே.
 

Latest ads

Back
Top