அரையர்களும், அடியார்களும் அவனை சூழ்ந்து கொண்டு இருப்பதே காரணம். கோயிலைச் சுத்தம் செய்யும் கைங்கரியம், கூடவே நம்பெருமாளைப் பார்த்து ‘தாலேலோ!’ சொல்லும் பாக்கியம் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் ?
ஆசாரியர்களை ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’ என்பார்கள். நம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே அது தான். ’சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ மாதிரி புதுசாக எதையும் பேச மாட்டார்கள் நம் பூர்வாசாரியர்கள் என்ன சொன்னார்களோ அதையே தான் திருப்பித் திருப்பி சொல்லுவார்கள். சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஸ்ரீரங்கத்தில் பல பகுதிகள் கிளி மண்டபம் தான். பல ஆசாரியர்கள் ஆழ்வார் பாசுரங்களில் திளைத்து அனுபவித்துச் சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்ன இடங்கள். அவர்கள் சொன்னதை இன்றும் நம் ஆசாரியர்கள் இன்றும் திரும்ப திரும்பச் சொல்ல நம்பெருமாள் அதைக் கேட்டுக்கொண்டு ஆனந்தமான இருக்கிறார்.
நம்பெருமாள் எல்லா அலங்காரத்திலும் அழகு ஆனால் கிளி மாலையுடன் இருப்பது கூடுதல் அழகு. அந்தக் கிளிகள் ஆசாரியர்கள். அவர்கள் நம்பெருமாள் மீது படர்ந்து கைங்கரியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஒரு தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையை இடது கையில் இடுக்கிக்கொண்டு வலது கையால் ஊட்டுவாள். அவனை அனுபவிக்க வேண்டும் என்றால் தன் இடுப்பில் வைத்து கையால் ஊட்டிவிடுவார்.
ஆசாரியர்கள் பலர் இப்படி பெருமாளிடம் சோறு சாப்பிட்டவர்கள் தான். நம்பெருமாள் தாய் போல இவர்களுக்கு ஊட்டி விட்டதைத் தான் இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏன் ஆண்டாள் இடது கையில் கிளி இருக்கிறது என்று. ஆண்டாள் அந்தக் கிளியை குழந்தை போல பாவித்து சோறு ஊட்டுகிறாள்! அப்போது தானே அது தெம்பாக தூது போக முடியும் !
நம்பெருமாள் தன் இஷ்டப்பட்டவர்களை கிளி போல கூடவே வைத்துக்கொள்வான் அந்த ‘குலசேகர ஆழ்வார்’ சேவித்த அந்த துப்புறவு பணியாளர் மாதிரி !
அடுத்த முறை பெருமாள் மீது அமர்ந்திருக்கும் கிளியை பார்க்கும் போது ஆசாரியர்களை நினைத்துக்கொள்ளுங்கள் !