• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"நம்பெருமாள்” எனும் திருநாமமிட்டழைத்தத&#

"நம்பெருமாள்” எனும் திருநாமமிட்டழைத்தத&#

"நம்பெருமாள்” எனும் திருநாமமிட்டழைத்தது யார்..?
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)


“நம்பெருமாள்” என்னவொரு அழகான திருநாமம்..!


கேட்டவுடன் பரவசப்படுத்தி ஆட்கொள்ளும் அற்புத நாமம்..!


பார்த்தவுடன் மெய்மறக்கச் செய்யும் மாயஜாலம்..!


சரி..! இந்த பெயரை யார் இவனுக்கு சூட்டினார்கள்..! பெருமபாலானோர் இந்த பெயர் அரங்கனுக்கு, அரங்கனது துணிகளை அன்றாடம் கொள்ளிடக்கரையில் தோய்த்து சலவை செய்து கொடுத்த, ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) வைத்த பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்..!


ஆனால் உண்மை அதுவன்று..!


இவருக்கும் முன்னமேயே இரண்டு ஆச்சார்ய புருஷர்கள், இவனை “நம்பெருமாள்” என உரிமையோடு, உள்ளன்போடு குறிப்பிடடுள்ளனர்.


அவர்கள்
(1) பிள்ளை லோகாச்சாரியார்


இவர் தமது “முமுக்ஷூப்படி“யில் “த்வயாதிகாரம் என்ற அதிகரணத்தில் கூறும் போது


‘திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சலென்ற கையும், கவித்த முடியும், முகமும், முறுவலும், ஆஸநபத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்! (முமுக்ஷூப்படி - த்வயம்-21)


இதுப்பற்றி ஆச்சார்யர் சொல்லும் போது, ”இவையனைத்தும் நம்பெருமாள் பக்கலிலேக் காணலாம்” என்கிறார்..!


(2) ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகர்


தம்முடைய பிரபந்த ஸாரத்திலே ஸ்வாமி தேசிகன், குலசேகர ஆழ்வாரைப் பற்றிய பாசுரத்தில்


”பொன் புரையும் வேல் குல சேகரனே மாசிப்
புனர்பூசத்து எழில் வஞ்சிக் களத்துத் தோன்றி
யன்புடனே நம்பெருமாள் செம் பொற் கோயில்
அனைத்து உலகின் பெரு வாழ்வும் அடியார் தங்கள்
இன்பமிகு பெரும் குழுவும் காண மண் மேல்
இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்ன –திருவஞ்சிக்களத்தில் ஸ்ரீரங்க யாத்ரையே எப்பொழுதும் கோஷிக்கப்படும் வழக்குக்கு ஏற்ப எடுத்த இசை என்கிறார்
நன்பொருள் சேர் திரு மொழி நூற்றைந்து பாட்டு
நன்றாக வெனக்கு அருள் செய் நல்கி நீயே –8-”


என்கிறார். இந்த பாசுரத்தில் மூன்றாவது வரியில் “நம்பெருமாள்” என்று பாடியது காண்க..!


(3) இரண்டு அரங்கனின் அர்ச்சை விக்ரஹங்கள்...! எவரேனும் அசலான அழகியமணவாளனைப் பற்றி
அறிந்தவர் கிடைப்பாரா என்று தேடுகின்றனர்.
ஒருவரேயொருவர், 93 வயதான ஒரு வயோதிகர் கிடைத்தார். ஆனால் கண்பார்வையின்றியிருந்தார். இவர் அரங்கன் ஆஸ்தானத்திலிருந்த போது அரங்கனின் வஸ்திரங்களை அன்றாடம் துவைத்து காய வைத்துத் தரும் வண்ணான் ஆவார்.
இவர் அரங்கனைப் பற்றிக் கூறிய விசேஷங்களும்
வயோதிக கொடவர் கூறிய விசேஷங்களும் ஒத்திருந்திதைக்கண்ட மன்னன் எழுந்தருளியிருப்பவர் அழகிய மணவாளனாகத்தாயிருக்கும் என்ற தெளிவிற்கு வந்தான்.


அந்த சமயம் அந்த வண்ணான் அரசனிடம், ‘அரசே!
நான் அரங்கனின் ஆடைகளைத் தோய்க்கும் முன் அவற்றை ஒரு முறை நினைத்து அந்த ஆடையைப் பிழிந்து தீர்த்தத்தினைப் பிரஸாதமாய் தவறாது உட்கொள்வேன் அழகியமணவாளன் உடுத்தி களைந்த ஆடையின் தீர்த்த பிரஸாதம் ஒரு தெய்வீகருசியுடையது. அதனை என் நாக்கு இனம் கண்டு கொள்ளும். தயைகூர்ந்து இருவருக்கும் தனித்தனியே திருமஞ்சனம் செய்வித்து எனக்கு அந்த ஈரவாடை தீர்த்தம் பிரஸாதியுங்கள். நான் யார் அழகிய மணவாளன் என்று அறுதியிடுவேன்” என்றுரைக்கின்றார்.


அதிர்கின்றான் அரசன்!.

(”நம்பெருமாளுக்கு வியர்க்கும்! விசிறி விடு!” என்கின்றார் பிள்ளைலோகாச்சாரியார். அதன்படியே வியர்க்கின்றது அவன் திருமேனி!. இங்கு வண்ணானின் தெய்வீக அனுபவத்தினை என்னச் சொல்வது.? அன்றாடம் அவன் துணியைத் தோய்த்த அவனுக்கு அவனது உடலிலிருந்து வெளிப்படும் தெய்வீக மணம் அத்துப்படியாகின்றது. அழகிய மணவாளன் வெறும் அர்ச்சை சொரூபமில்லை! அரங்கன் ஜீவிதன்!)


அழகிய மணவாளனுக்கும், புதிதாய் வந்த அர்ச்சை மூர்த்திக்கும் தனித்தனியே திருமஞ்சனம் நடக்கின்றது. பல நாட்கள் கடந்து நடந்த இத்திருமஞ்சனத்திற்கும், அரங்கன் யார்? என்ற புதிருக்கு விடை காணவும் ஏராளமான வைணவர்களும், அரசரும், கோபண்ண
உடையாரும், பொதுமக்களும் அரங்கன் திருமுற்றத்தில் நிறைந்திருந்தனர்.

பல வருடங்கள் கழித்து, அரங்கனடியார்களால் பொலிவுறுகின்றது ஸ்ரீரங்கம். மீண்டும் தன்னடியார்களைக் கண்ட அரங்கனது திருமுகம் பூரிக்கின்றது. ..!

அவனது திருமேனி இப்பூரிப்பினால் மாற்றமடைந்து,
சுகந்த மணம் கமழ்ந்தது...!

முதலில் அரங்கனாய் இதுகாறும் மக்கள் நினைத்திருந்த அந்த அர்ச்சையின் தீர்த்த பிரஸாதம் வண்ணானுக்கு அருளப்பட்டது...! அரங்கனின் திருமேனி சுவையறிந்து பண்பட்ட அவனது முகத்தில் எந்த சலனமும் காணப்படவில்லை. ‘இதுவன்று அழகிய மணவாளன்” என்றுரைத்தான்.

அடுத்ததாக அரங்கனின் ஈரவாடை தீர்த்தம் வண்ணானுக்கு அருளப்பட்டது...!


பல வருடங்களாய் சுவைத்து, நடுவில் 60 வருடங்களாய் இத்தெய்வீகச் சுவை விடுபட்டு, ஏங்கியிருந்த அவன் நாவு இந்த அமிர்தத்தையுணர்ந்தது...!


நாவின் உணர்வு நரம்புகள், உடலில் மின்சாரம் போன்று பாய்ந்தது!


உணர்வு பிழம்பானான் வண்ணான்...!


ஆர்ப்பரித்தான்...!

‘இவரே நம் பெருமாள்! இவரே நம்பெருமாள்” என்று கதறியழுதான்!. கண்களில் கண்ணீர் பெருக்க மூர்ச்சையானான். தெளிந்தான்! மீண்டும் அழுதான்! மீண்டும் மயக்கமடைந்தான்!

கொடவரும் உணர்வுகள் கொந்தளிக்க, ‘ரங்கா! ரங்கா!’ என்று கதறியழுதார்.

அழகிய மணவாளன் வண்ணானாலும் ‘நம்பெருமாள்” ஆனான்!.

நம்பெருமாள் என்ற பெயர் - அவனுக்கும் நமக்கும் உகப்பாகயிருக்கின்றது!. அவன் நம்மோடு கலந்தவன்!
நம்மோடு நம்பக்கம் இருப்பவன்!. நம்மை உகப்பவன்!. நம்மை காப்பவன்!. நம் நலம் விரும்புபவன்!. நம் வீட்டுப் பிள்ளை!. நம் குழந்தை!. நம் ஜீவன்!. நம்மை ஆள்பவன்!.

இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகுற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை - இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ - நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்.
-நான்முகன் திருவந்தாதி-96-
தாஸன் - முரளீ பட்டர்-
 

Latest ads

Back
Top